மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

100 ஜோடிகள் சுயமரியாதை திருமணம்!

100 ஜோடிகள் சுயமரியாதை திருமணம்!

ஈரோட்டில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள திமுக மண்டல மாநாட்டையொட்டி, 100 ஜோடிகளின் சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைக்கிறார் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள சரளையில் திமுகவின் மண்டல மாநாடு, வரும் மார்ச் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. மாநில உரிமை, சமத்துவம், மதச்சார்பின்மை ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில், இந்த மாநாடு அமையப் பெறவுள்ளது. இதில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் பலரும் கலந்துகொள்கின்றனர். இந்த மாநாட்டைச் சிறப்பாக நடத்தும் வகையில், சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர் ஈரோடு மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த குழுவினரின் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையில் நேற்று (பிப்ரவரி 6) நடைபெற்றது. ஒவ்வொரு குழுவினருக்குமான பணிகள் குறித்து, இதில் விவாதிக்கப்பட்டது. இதுபற்றி, இந்த மாநாட்டின் வரவேற்புக்குழு தலைவரும் முன்னாள் அமைச்சருமான முத்துசாமி பேசியபோது, தமிழக அரசியலில் திருப்புமுனை ஏற்படுத்தும் வகையில் இந்த மாநாடு அமையும் என்றார்.

“இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு, ஈரோடு மாவட்ட மாநாடு அமையும். இனிமேல் திமுக மாநாடு எங்கு நடந்தாலும், ஈரோடு மண்டல மாநாடு முன்னுதாரணமாக இருக்கும்வகையில் இதனை நடத்திக் காட்டுவோம். செயல்தலைவர் ஸ்டாலின் வழிகாட்டுதலில் மாநாடு சிறப்பாக நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் இளைஞர் எழுச்சி நாள் மற்றும் தளபதியின் பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி, 100க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு சுயமரியாதை திருமணத்தை மு.க.ஸ்டாலின் நடத்தி வைக்கவுள்ளார்” என்று தனது பேச்சில் குறிப்பிட்டார் முத்துசாமி.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 7 பிப் 2018