மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

மருத்துவ குற்றப்பின்னணி பேசும் 'விழி மூடா இரவு’!

மருத்துவ குற்றப்பின்னணி பேசும் 'விழி மூடா இரவு’!

க்ரைம் த்ரில்லராக உருவாகிவரும் விழி மூடா இரவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

சர்னேஷ், சதீஸ் ராஜன், அசார் ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் விழி மூடா இரவு. இந்தப் படத்தை தனது பி மாஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் தயாரிப்பதோடு இயக்கி வருகிறார் அறிமுக இயக்குநர் பாலாஜி. ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு மெடிக்கல் க்ரைம் த்ரில்லராக இப்படம் உருவாகிவருகிறது. சமீப காலமாக மெடிக்கல் க்ரைம் த்ரில்லரைக் கதைக்களமாகக் கொண்டு வெளியான பல படங்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்தப் படமும் மருத்துவம் சார்ந்து நடக்கும் குற்றச் சம்பவங்களை மையமாகக் கொண்டே எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று (பிப்ரவரி 6) விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரில் “சூழ்ச்சியின் நோக்கம் தருமமாயின் அச்சூழ்ச்சியும் தருமமே” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. ஜெய்சன் வில்லியம்ஸ் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ள இப்படத்திற்கு ஹீரோயினுக்கான தேர்வு நடைபெற்றுவருகிறது. இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு திருநெல்வேலியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றுவருகிறது.

இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

புதன் 7 பிப் 2018