போக்குவரத்துத் துறை செயலாளருக்கு நோட்டீஸ் !

கட்டண உயர்வு, போக்குவரத்துக் கழகத்தில் நஷ்டம் குறித்து விளக்கம் கேட்டு போக்குவரத்துத் துறை செயலாளருக்குச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
போக்குவரத்துத் துறையில் ஏற்பட்ட ரூ.20,488 கோடி இழப்பு குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று கே.கே.ரமேஷ் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், பணிமனைகளை ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் நிர்வகிக்க வேண்டும் . பேருந்துகளுக்கு உதிரிபாகங்கள் வாங்குவது, பராமரிப்பது முறையாக மேற்கொள்ளப்படவில்லை. கட்டணம் உயர்த்தப்படாமலும் போக்குவரத்துத் துறையில் வருவாயை ஈட்டலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வரும் மார்ச் 7ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு போக்குவரத்துத் துறை செயலாளருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.