மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

ரசிகர்களை ஏமாற்றிய சென்னை அணி!

ரசிகர்களை ஏமாற்றிய சென்னை அணி!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று (பிப்ரவரி 6) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை அணி தோல்வியைத் தழுவியது.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 65ஆவது லீக் போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள சென்னையின் எஃப்.சி அணியும், முதலிடத்தில் உள்ள பெங்களூரு எஃப்.சி அணியும் பலபரிட்சை நடத்தின. இரண்டு அணிகளும் சமபலம் கொண்ட அணிகள் என்பதால் ரசிகர்களிடையே ஆர்வம் அதிகம் காணப்பட்டது. இதற்கு முன்னர் இந்த சீசனில் இவ்விரு அணிகளும் பெங்களூருவில் மோதிய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. எனவே, இந்த உள்ளூர் போட்டியிலும் வெற்றி பெற்றுவிடும் என்ற நம்பிக்கையில் சென்னை ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். ஆனால், சென்னை அணி 1-3 என்ற கோல் கணக்கில் மோசமான தோல்வியைத் தழுவி ரசிகர்கள் ஏமாற்றியது.

போட்டியின் தொடக்கம் முதல் சென்னை வீரர்கள் எதிரணி வீரர்களின் ஆட்டத்தைச் சமாளிக்க முடியாமல் தடுமாறினார். போட்டியின் இரண்டாவது நிமிடத்திலேயே பெங்களூரு அணி முதல் கோல் அடித்து அசத்தியது. அதன் தொடர்ச்சியாக சென்னை வீரர் பிரான்சிஸ் பெர்னாண்டோஸ் 33ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து முதல் பாதியை 1-1 என சமனில் முடித்து வைத்தார். ஆனால், இரண்டாம் பாதியில் பெங்களூரு அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். 63ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் மிக்கு ஒரு கோல் அடித்து அணியை 2-1 என முன்னிலை பெற செய்தார்.

சென்னை வீரர் ஹென்றிக் சேரேனோ 71ஆவது நிமிடத்தில் தவறுதலாகப் பந்தை எடுக்க முயற்சி செய்ததால் சிகப்பு அட்டை கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

புதன் 7 பிப் 2018