மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

பிளஸ் 1 : அகமதிப்பெண் பட்டியல்!

பிளஸ் 1 : அகமதிப்பெண் பட்டியல்!

பிளஸ் 1 செய்முறை தேர்வு அகமதிப்பெண் பட்டியலை மார்ச் 26 ஆம் தேதிக்குள் பள்ளிக்கல்வி இயக்குநரகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனத் தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படுவது போல் இந்த ஆண்டிலிருந்து பிளஸ் 1 வகுப்புக்கும் மாநில அளவில் பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 7ஆம் தேதி முதல் ஏப்ரல் 16 வரை நடைபெறவுள்ளது. அதேபோல், பிளஸ் 1 மாணவர்களுக்கு முதல் முறையாக செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு பிப்ரவரி 16ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. செய்முறை தேர்வு 30 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். மாணவர் வருகையைக் கல்வியாண்டின் ஆரம்ப நாள் முதல் 31.1.2018 தேதி வரை கணக்கிட்டு 3 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

தலைமையாசிரியர்கள் பிளஸ் 1 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை தயார் செய்து மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். பிப்ரவரி 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதிக்குள் மதிப்பெண் பட்டியலை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். மார்ச் 15ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை இணையதளத்தில் மதிப்பெண்ணைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். அகமதிப்பீட்டு பட்டியலை மாவட்ட கல்வி அலுவலகத்தில் மார்ச் 26ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர்கள், மண்டல தேர்வு துணை இயக்குநரிடம் மார்ச் 28ஆம் தேதிக்குள் மதிப்பெண் பட்டியலை ஒப்படைக்க வேண்டும். மண்டல துணை இயக்குநர்கள் அகமதிப்பீட்டு பட்டியலை ஏப்ரல் 2ஆம் தேதி தேர்வு துறை இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனப் பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 7 பிப் 2018