மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்ற பூம்ரா!

ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்ற பூம்ரா!

ஃபோர்ப்ஸ் நாளிதழ் கடந்த திங்கள்கிழமை (பிப்ரவரி 5) வெளியிட்ட பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பூம்ரா இடம் பெற்றுள்ளார்.

ஃபோர்ப்ஸ் நாளிதழ் பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்களை அவர்களின் வருடாந்தர வருமானத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்துவது வழக்கம். அதன்படி இந்த முறை 30 வயதிற்கும் குறைவாக உள்ள இளம் வீரர்களில் மிகவும் பிரபலமான மற்றும் அதிக வருமானம் ஈட்டும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள், இசையமைப்பாளர்கள், திரைப்பட பிரபலங்கள் எனப் பலதரப்பட்ட நபர்களின் பெயர்களை இணைத்து இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று விதமான நிபந்தனைகளின் அடிப்படையில் பரிசோதனை செய்து அதன் பின்னரே இதனை வெளியிட்டுள்ளதாக ஃபோர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தப் பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பூம்ரா, துப்பாக்கி சுடும் வீராங்கனை ஹீனா சிந்து, இந்தியன் ஹாக்கி கோல் கீப்பர் சவிதா பூனியா மற்றும் இந்தியன் பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவ்ர் ஆகிய விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளும் இடம் பெற்றுள்ளனர். அவர்களுடன் பாலிவுட் நடிகர் பூமி பெட்னேகர், மிதிலா பல்கர் மற்றும் விக்கி கவுஷல் ஆகியோரும் இதில் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் மேலும் சில இளம் தொழிலதிபர்களை குறிப்பிட்டுள்ளது இந்த பட்டியல்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

புதன் 7 பிப் 2018