மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

மானிய ஸ்கூட்டிக்கு லஞ்சம்!

மானிய ஸ்கூட்டிக்கு லஞ்சம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி அலுவலகம் ஒன்றில் ஸ்கூட்டி மானிய திட்டத்துக்கு விண்ணப்பிக்க லஞ்சம் வாங்கியதாகப் புகார் எழுந்துள்ளது.

தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், சொந்தமாகத் தொழில் செய்யும் பெண்களின் நலனுக்காகத் தமிழக அரசு சார்பில், மானிய விலை ஸ்கூட்டிகளைப் பெற ரூ.25,000 அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவிகிதம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இதற்கான விண்ணப்பங்கள் ஜனவரி 22ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 5ஆம் தேதி வரை வழங்கப்பட்டு வந்தன. தற்போது குறைவான எண்ணிக்கையிலேயே விண்ணப்பங்கள் பெறப்பட்டதால் பிப்ரவரி 10ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட பிப்ரவரி 5 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் ஒரு விண்ணப்பத்துக்கு ரூ.225 வசூலிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. பின்னர் பொதுமக்கள் பலர் ஒன்று திரண்டு அதிகாரிகளிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து பணம் பெறுவது நிறுத்தப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாவட்டத் திட்ட அலுவலக அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் சுரேஷ்குமார், “பேரூராட்சி அலுவலகம் ஒன்றில் விண்ணப்பத்துக்குப் பணம் வாங்கப்பட்டு உள்ளதாகப் புகார் வந்துள்ளது. அதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளோம். இதில் முறைகேடுகள் நடந்தது கண்டறியப்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 7 பிப் 2018