மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

துணைவேந்தர் ஊழல்: ஆளுநர் பதிலளிக்க வேண்டும்!

துணைவேந்தர் ஊழல்: ஆளுநர் பதிலளிக்க வேண்டும்!

‘பல்கலைக்கழக பணி நியமன ஊழல் குறித்துத் தமிழக ஆளுநர் விளக்கமளிக்க வேண்டும்’ என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

வேலூரில் நேற்று (பிப்ரவரி 6) பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “ஜெயலலிதா இருக்கும்போதே 18 வகையான ஊழல்கள் குறித்துப் பட்டியலிட்டு அப்போதைய ஆளுநர் ரோசையாவிடம் அளித்தோம். அவர் சரியில்லாதவர் என்பதால் அதைப் படித்தாரா அல்லது குப்பைத்தொட்டியில் போட்டாரா என்பது தெரியாது. தற்போது எடப்பாடி அரசின் ஊழல் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் அளித்தோம். அவர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம். நாங்கள் அளித்த பட்டியலில் பல்கலைக்கழகங்கள் தொடர்பான ஊழல் குறித்தும் குறிப்பிட்டுள்ளோம்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதியின் ஊழல் பற்றி அதிர்ச்சிகர தகவல்கள் வருகின்றன. 20 பேராசிரியர்கள் துணைவேந்தர் கணபதிக்கு இடைத்தரகர்களாகச் செயல்பட்டுள்ளனர்.

64 பேராசிரியர்களைப் பணம் பெற்றுக்கொண்டு துணைவேந்தர் நியமனம் செய்துள்ளார். அவர்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்ய வேண்டும். பேராசிரியர்களைத் தேர்வுக் குழு தேர்வு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 21 பல்கலைக்கழகங்களிலும் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளது.

பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மட்டும் சிக்கிக்கொண்டார். மற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் சிக்கவில்லை. எனவே, அனைத்துப் பல்கலைக்கழக ஊழல் குறித்தும் சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்.

இதற்கு முன்னாள் இருந்த துணைவேந்தர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும். பல்கலைக்கழக ஊழல் வழக்குகளை விசாரிக்க மதுரை மற்றும் சென்னையில் தனிக் கோர்ட்டு அமைத்து விரைந்து விசாரணை நடத்த வேண்டும்.

ஊழல் செய்தவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும். தற்போதைய உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகனுக்கும் பங்கு கொடுத்துள்ளேன் என்றும், முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கும் 8 கோடி ரூபாய் பங்கு கொடுத்துள்ளதாகவும் துணைவேந்தர் கணபதி கூறியுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள துணைவேந்தர் கணபதியைத் தகுதிநீக்கம் செய்திருக்க வேண்டும்; குறைந்தபட்சம் இடைநீக்கமாவது செய்திருக்க வேண்டும்” என்று கூறிப்பிட்டார்.

மேலும், “இந்த விவகாரம் தொடர்பாக பதிலளித்துள்ள அமைச்சர் அன்பழகன், துணைவேந்தரை ஆளுநர்தான் நியமிப்பார். துணைவேந்தர் நியமனத்துக்கும் கல்வித் துறைக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளது ஆளுநர் மீது பழி போட முயற்சிப்பதாகத் தெரிகிறது” என்று கண்டனம் தெரிவித்துள்ள ராமதாஸ், “பல்கலைக்கழகப் பணி நியமன ஊழல் குறித்து ஆளுநர் விளக்கம் அளிக்க வேண்டும்; அது சம்பந்தமாக அவரை விசாரிக்கவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

எம்.எல்.ஏக்களின் சம்பளத்தை 100 மடங்கு உயர்த்திய அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை என விமர்சித்த அவர், “சட்டம் ஒழுங்கு மோசமாகியுள்ளது. கள்ளத்துப்பாக்கி விற்கும் மாநிலமாகவும், சந்தையாகவும் தமிழகம் மாறியுள்ளது. தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் போதை பொருள்கள் தலை விரித்தாடுகிறது.

தமிழக உரிமைகள் தாரைவார்க்கப்பட்டுள்ளன. கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் இன்ஜினீயரிங், மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நுழைவுத் தேர்வுகள் ‘நுழையா’ தேர்வுகளாக உள்ளன.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 7 பிப் 2018