மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்: வசூல் என்ன?

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்: வசூல் என்ன?

விஜய் சேதுபதி பல்வேறு வித்தியாசமான கெட்டப்களில் நடித்து பிப்ரவரி 2 அன்று வெளியான படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. படம் பார்க்க ரசிகர்கள் வராததால் தென் மாவட்டங்களில் உள்ள புறநகர் தியேட்டர்களில் திங்கட்கிழமை காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

கௌதம் கார்த்திக், நிகாரிகா, காயத்ரி, விஜி சந்திரசேகர், ரமேஷ் திலக் உள்பட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். பி.ஆறுமுக குமார் இயக்கியுள்ளார். இந்தப் படம் ரிலீசுக்கு முன் மிகப்பெரும் எதிர்பார்ப்பை வியாபார வட்டத்திலும், சினிமா ரசிகர்கள் மத்தியிலும் ஏற்படுத்தி இருந்தது.

விஜய் சேதுபதி நடித்து வெளியான படங்கள் தமிழ் நாட்டில் அதிகபட்சம் ரூபாய் எட்டு கோடிக்கு மேல் வருமானத்தை கொடுத்தது இல்லை. இருப்பினும் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படம் தமிழ்நாடு உரிமை ரூ.10 கோடிக்கு அவுட்ரேட் அடிப்படையில் வாங்கப்பட்டிருந்தது. அதிக திரைகளில் வெளியான இந்தப் படத்தின் முன்பதிவு சென்னை போன்ற புறநகரங்களில் உள்ள தியேட்டர்களில் அதிகமாக இருந்தது.

விஜய் சேதுபதி படங்களுக்கு குறைந்தபட்ச ஓப்பனிங் எப்போதும் இருக்கும். இந்தப் படத்தில் கெளதம் கார்த்திக்கும் நடித்திருப்பதால் தென் மாவட்டங்களில் கூடுதல் ஓப்பனிங் இருந்தது. ஆனால், அடுத்தடுத்த காட்சிகளில் இது குறைவாக இருந்தது.

விஐய் சேதுபதி படத்துக்குப் போட்டியாக மற்ற நான்கு படங்களும் இல்லை என்பதால் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் வசூல் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெள்ளி, சனி, ஞாயிறு வரை சுமாராக வசூல் இருந்தது. திங்கட்கிழமையிலிருந்து வசூல் மிகப் பெரும் சரிவுக்கு உள்ளாகியிருக்கிறது. திங்கட்கிழமை தென் மாவட்டங்களில் பகல் மற்றும் மாலை காட்சிகளுக்கு பார்வையாளர்கள் வராததால் காட்சிகள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய நிலவரப்படி அவுட்ரேட் முறையில் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படம் வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் முதல் மூன்று நாள்களில் சுமார் ரூ.6.52 கோடி மொத்த வசூல் செய்திருக்கிறது. விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் என இரட்டை நாயகர்கள் நடித்துள்ள படத்துக்கு இந்த வசூல் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. பொங்கல் பண்டிகை தொடங்கி இதுவரை ரீலீஸ் செய்யப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வரிசையில் இந்த படமும் இணைந்துள்ளது.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

புதன் 7 பிப் 2018