மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

ஓவியா படத்தில் சிம்பு?

ஓவியா படத்தில் சிம்பு?

ஓவியா நடிக்கும் அடுத்த படத்துக்கு இசையமைப்பாளராக சிம்பு ஒப்பந்தமாகி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள மாயாஜால் தியேட்டர் அதிபரின் மகளும் பென்டா மீடியா என்ற அனிமேஷன் நிறுவனத்தின் நிறுவனரான அனிதா உதீப் இயக்கும் படத்தில், ஓவியா ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் இந்தப் படத்தில் ஆன்சன் பால் கதையின் நாயகனாக நடிக்கிறார். தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகவிருக்கும் இவர் ‘சோலோ’ போன்ற படங்களில் நடித்திருப்பதோடு, சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ படத்திலும் நடித்திருக்கிறார்.

தற்போது இந்தப் படத்துக்கு சிம்பு இசையமைக்க இருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கெனவே சந்தானம் நடிப்பில் வெளியான ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக சிம்பு அறிமுகமானார். அதன்பின் புத்தாண்டை முன்னிட்டு சிம்பு இசையில் உருவான ‘மரண மண்டை’ என்ற பாடலை சிம்புவுடன் இணைந்து ஓவியா பாடினார். அந்த நட்பு அடிப்படையில்தான் ஓவியா படத்துக்கு சிம்பு இசையமைக்க ஒப்புக்கொண்டதாக ஸிஃபி இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 7 பிப் 2018