மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

பத்தாம் ஆண்டில் ‘பயணிக்கும்’ மமக!

பத்தாம் ஆண்டில் ‘பயணிக்கும்’ மமக!

அரசியல் சாராத அமைப்பாக, 1995ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். இந்த அமைப்பின் அரசியல் வடிவமாக 2009ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி. இன்று பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

பத்தாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி கோட்டை முதல் குமரி வரை என்ற பெயரில் கிழக்குக் கடற்கரை சாலை வழியாக தொடர் பயணத்தை இன்று (பிப்ரவரி 7) முதல் மேற்கொள்கிறார் மமக தலைவர் ஜவாஹிருல்லா.

இதுபற்றி நம்மிடம் பேசிய மமக நிர்வாகிகள், “மனிதநேய மக்கள் கட்சியின் பத்தாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, சென்னை முதல் கன்னியாகுமரி வரை, கிழக்குக் கடற்கரைச் சாலை வழியே உள்ள எமது கிளை அமைப்புகளின் சார்பில், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்கிறோம்.

இந்தப் பயணத்தின்போது கொடியேற்றுதல் நிகழ்ச்சி, மரக்கன்று நடுதல், படிப்பகம் திறப்பு, ஏழைகளுக்கு உணவு வழங்குதல் நிகழ்ச்சிகளையும், சில குறிப்பிட்ட கிளைகளில் பிரசாரக் கூட்டங்கள் நடத்திடவும் திட்டமிட்டுள்ளோம். இன்று 7ஆம் தேதி தொடங்கும் பயணம் 14ஆம் தேதி குமரியில் நிறைவு பெறும்” என்றனர்.

மேலும், இந்த விழிப்புணர்வுப் பயணத்தின்போது முக்கியமான மூன்று அம்சத் திட்டங்களை வலியுறுத்தி பிரசாரம் செய்யப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மீனவர்களைக் கடற்கரையை விட்டு வெளியேற்றும் மத்திய அரசின் ‘சாகர் மாலா’ திட்டத்தைக் கைவிட வலியுறுத்துதல், இந்திய அரசியல் சாசன சட்டம் வழங்கிய உரிமைகளைப் பறித்து கொண்டுவரத் துடிக்கும் ‘முத்தலாக்’ சட்டத்தை எதிர்த்தல், மின்னணு வாக்குப்பதிவு முறையைக் கைவிட்டு வாக்குச் சீட்டு மூலம் வாக்களிக்கும் முறையை நடைமுறைப்படுத்தல் ஆகிய மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை முதல் குமரி வரையிலான பயணத்தில் பிரசாரம் செய்ய இருப்பதாக தெரிவித்தனர் மமக நிர்வாகிகள்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

புதன் 7 பிப் 2018