மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

எடப்பாடி ஆட்சியில் முதன்முறையாக...

எடப்பாடி ஆட்சியில் முதன்முறையாக...

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் முதன்முதலில் எம்.எல்.ஏக்கள் மனுக்கள், குழு ஆய்வுக்குச் சென்றுள்ளது கொடைக்கானலுக்கு.

எந்த ஆட்சிவந்தாலும் மக்களுக்கான திட்டங்களையும், மக்கள் பணிகளையும், சேவையையும், சுகாதாரத்தையும், தொழிற்சாலைகளையும் அனைத்துக்கட்சி எம்.எல்.ஏக்கள் அடங்கிய ஒரு குழுவை நியமித்துக் கண்காணிப்பது வழக்கம். இந்தக் குழுவினர் ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு செய்து முதல்வருக்கு ரிப்போர்ட் கொடுப்பார்கள்.

இந்த அறிக்கையை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் துறை செயலர்களை அழைத்துப்பேசி நடவடிக்கை எடுப்பார் முதல்வர். அதனால் அதிகாரிகளும் பயந்து வேலைகளைத் தரமாகச் செய்வார்கள், ஊழல்களும் குறையும்.

இந்தக் குழுவுக்கு எம்.எல்.ஏக்கள் மனுக்கள் குழு என்று பெயர். அப்படிப்பட்ட குழு, கடந்த சில வருடங்களாகவே செயலிழந்து இருந்த நிலையில், இப்போது புத்துயிர் கொடுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

ஆளும்கட்சி கொறடா ராஜேந்திரன் தலைமையில், அனைத்துக் கட்சியிலிருந்தும் எம்.எல்.ஏக்களை நியமித்து ஒரு குழுவாக ஆய்வுக்கு அனுப்பியுள்ளார். இந்தக் குழு இன்று பிப்ரவரி 7ஆம் தேதி கொடைக்கானலிலும், நாளை 8ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திலும் ஆய்வு செய்துவிட்டு சென்னை திரும்புகிறார்கள்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

புதன் 7 பிப் 2018