மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

கிச்சன் கீர்த்தனா: சுண்டைக்காய் வத்தல் குழம்பு!

கிச்சன் கீர்த்தனா: சுண்டைக்காய் வத்தல் குழம்பு!

தேவையானவை:

துவரம்பருப்பு - 1 டீஸ்பூன்

கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்

மிளகு - சிறிதளவு

சீரகம் - சிறிதளவு

வெந்தயம் - சிறிதளவு

சுண்டவத்தல் - 4 டீஸ்பூன்

நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

புளி - 2 எலுமிச்சை அளவு

வெல்லம் (தேவையானால்) - சிறிதளவு

மஞ்சள் பொடி - சிறிதளவு

பெருங்காயம் - சிறிதளவு

பூண்டு - 10 பல்

மிளகாய்பொடி - 1 டீஸ்பூன்

மல்லி பொடி - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

தாளிக்க: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – ஒன்றரை டீஸ்பூன்.

செய்முறை:

துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகு, சீரகம், வெந்தயம் இவற்றை கடாயில் எண்ணெய் இன்றி வறுக்கவும். சுண்டவத்தலை கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, நன்கு கருகும்வரை வறுக்கவும். வறுத்த பொருள்களை மிக்சியில் பொடி செய்யவும். புளியைக் கொஞ்சம் நீர் ஊற்றி ஊறவைத்து கரைக்கவும். பிறகு, அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி, அது காய்ந்தபின் கடுகு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு போடவும். இவை சிவந்தபின், பூண்டு போட்டு வதக்கவும்.

பின் மிளகாய் பொடி, மல்லி பொடி போட்டு, ஒருமுறை கிளறியபின், உடனேயே புளிகரைசலை ஊற்றவும். (மிளகாய் பொடி ரொம்ப நேரம் இருந்தால் கருகிவிடும். வறுக்காமலும் மிளகாய் பொடியைப் போடலாம்) இதில் மஞ்சள்பொடி, பெருங்காயம், வெல்லம், உப்பு போடவும். பிறகு பொடிசெய்த பருப்பை ஒரு டம்ளர் நீர்விட்டுக் கரைத்து ஊற்றவும்.

நன்கு கொதித்து, குழம்பு சுண்டி, கெட்டியாக வந்ததும், இறக்கி கறிவேப்பிலையைப் போட்டு பரிமாறவும்.

இட்லி தோசைக்கும் சூப்பராக இருக்கும். தொட்டு சாப்பிட சுட்ட அப்பளம், வடகம் நல்ல துணை. வேண்டுமானால், மிளகு தக்காளி வத்தலை வறுத்தும் இதில் போடலாம்.

கீர்த்தனா சிந்தனைகள்:

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 7 பிப் 2018