மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

பத்மாவத் வரிசையில் மணிகார்னிகா!

பத்மாவத் வரிசையில் மணிகார்னிகா!

சர்ச்சைகளையும் போராட்டங்களையும் வன்முறையையும் சந்தித்து வெளியாகியுள்ள பத்மாவத் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடிவருகிறது. படம் வெளிவந்த பின்னரும் இந்தச் சர்ச்சை குறைந்தபாடில்லை. அதற்குள் மணிகார்னிகா படத்துக்கு எதிராகப் போராட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன.

19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஜான்சி ராணி லட்சுமிபாயின் வாழ்க்கை வரலாறு ‘மணிகார்னிகா: தி குயின் ஆஃப் ஜான்சி’ என்ற பெயரில் தயாராகிவருகிறது. கங்கணா ரனாவத் ஜான்சி ராணி வேடம் ஏற்று நடிக்கிறார். இந்த வருடத்தின் இறுதியில் இந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் சர்வ பிராமன் மகாசபா என்ற ராஜஸ்தானைச் சேர்ந்த பிராமண அமைப்பு படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கங்கணா ஏற்றுள்ள ராணி கதாபாத்திரம் பிரிட்டிஷ் அதிகாரி மேல் காதல் வயப்பட்டதாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது என்றும் சர்ச்சைக்குரிய அந்தக் காட்சிகளை நீக்கவில்லையெனில் ராஜஸ்தானில் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் தாக்குதல் நடத்துவோம் என்றும் அந்த அமைப்பினர் கூறியுள்ளனர். பத்மாவத் படத்துக்காக வன்முறையில் இறங்கிய கர்னி சேனா அமைப்பு சர்வ பிராமன் மகாசபாவின் இந்த அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஏற்கனவே கர்னி சேனாவின் பத்மாவத் எதிர்ப்புக்கு இந்த அமைப்பு ஆதரவு வழங்கியிருந்தது.

இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில் பேசிய இந்த அமைப்பின் தலைவர் சுரேஷ் மிஸ்ரா, “ராஜஸ்தானில் பல இடங்களில் இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு நடந்துள்ளது. எங்களது நண்பர்கள் மூலம் படம் குறித்த தகவலை நாங்கள் அறிந்துகொண்டோம். வெளிநாட்டினர் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக்கொண்டு ராணியின் புகழைச் சீர்குலைக்க முயற்சி செய்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார். மேலும் சர்வ பிராமன் மகா சபா சார்பாக தயாரிப்பாளர் கமல் ஜெயினுக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் தரப்பு அதற்கு எத்தகைய பதிலையும் தரவில்லை.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 7 பிப் 2018