மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

துணைவேந்தர் பணியிடை நீக்கம்!

துணைவேந்தர் பணியிடை நீக்கம்!

லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியைப் பணியிடை நீக்கம் செய்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

உதவிப் பேராசிரியர் பணி நியமனத்துக்கு ரூ. 30 லட்சம் லஞ்சம் வாங்கியதாகக் கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதியை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சமீபத்தில் கைது செய்தனர். அவருடன் இடைத்தரகராகச் செயல்பட்ட பேராசிரியர் தர்மராஜும் கைது செய்யப்பட்டார். பாரதியார் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி இயக்குநர் மதிவாணன்மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் அவரும் கைது செய்யப்பட்டார். இவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து தகுதிவாய்ந்த தங்களுக்கு உதவிப் பேராசிரியர் பணி வழங்கப்படவில்லை எனக் கோரி பணி வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, துணைவேந்தர் மூலம் நியமிக்கப்பட்டவர்களை நீக்கிவிட்டும் நேர்மையாக நியமனம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். துணைவேந்தர் லஞ்சம் வாங்கியது குறித்து சிபிஐ விசாரணை வேண்டுமென ஸ்டாலின், திருநாவுகரசர், அன்புமணி உள்ளிட்ட தலைவர்களும் வலியுறுத்தினர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், “துணைவேந்தர் பதவியிலிருந்து கணபதியை சஸ்பெண்ட் செய்வதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. துணைவேந்தரை சஸ்பெண்ட் செய்யும் அதிகாரம் ஆளுநரிடம்தான் உள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறையின் அறிக்கையைப் பெற்றபின் ஆளுநர் இதுகுறித்து முடிவெடுப்பார்” என்று தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து ஜாமீன் வழங்கக் கோரி கோவை சிறப்பு நீதிமன்றத்தில் துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜூ ஆகியோர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. இந்த நிலையில் துணைவேந்தர் கணபதியை பணியிடை நீக்கம் செய்து தமிழக ஆளுநரும், கோவை பாரதியார் பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் நேற்று (பிப்ரவரி 6) உத்தரவிட்டுள்ளார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 7 பிப் 2018