மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

பியூட்டி ப்ரியா: மிருதுவான கை கால்களுக்கு!

பியூட்டி ப்ரியா: மிருதுவான கை கால்களுக்கு!

கார் பராமரிப்புக்கும் காம்பவுண்ட் பராமரிப்புக்கும் ஆட்கள் வைத்து பாதுகாக்கும் நாம், நம் கை கால்களை, நகங்களைப் பாதுகாப்பது என்பது சற்று குறைவுதான். முன்பெல்லாம் வைத்தியர்கள் கால்களில் ஏற்படும் மாற்றங்கள், நகங்களின் நிலைகளையெல்லாம் வைத்தே என்ன நோய் என்று கண்டுபிடித்து விடுவார்கள். பளிச்சிடும் தேகத்தையும் பிரகாசமான தேஜஸையும் கொண்டாலும் சின்னச் சின்ன விஷயங்களிலும் கவனம் வைத்தல் நலம்.

கருமை நிறம் மாற...

* கை கால் முட்டிகளில் கருமை நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சைப்பழச் சாற்றைத் தேய்த்து சோப்புப் போட்டு குளிக்க வேண்டும். நாளடைவில் கருமை நிறம் போய் விடும்.

வறண்ட தோல், சுருக்கம் நீங்கி மிருதுவாக...

* தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊறவைத்து சோப்புப் போட்டு குளிக்க வேண்டும்.

* ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும்.

* தண்ணீரை மிதமாகச் சூடுபடுத்தி, சிறிது உப்பு கலந்து, அதில் விரல்களைச் சிறிது நேரம் வைத்திருந்தால், விரல்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

நகம் பராமரிப்பு

* நகங்களை வெட்டும் முன் எண்ணெயைத் தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.

* சிலருக்கு நகம் கடினத் தன்மையுடன் இருப்பதால், நகத்தை வெட்டுவதற்குக் கஷ்டமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் குளித்தவுடன் நகம் வெட்டினால், நகம் ஈரத் தன்மையுடன் இருப்பதால், எளிதாக வெட்ட வரும். அதேபோல், தேங்காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினாலும் எளிதாக வெட்டலாம்.

* நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறவர்கள், சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும்படி வைத்தால், நகங்கள் உறுதியாகும்.

* கிளிசரின் மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து, அதை நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும். அதேபோல், பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினாலும் நகம் பளபளப்படையும். மாதத்துக்கு ஒருமுறை இப்படி செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

* ஆலிவ் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி அதை விரல்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்துவந்தால் நகங்கள் நன்றாக வளரும்.

* மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து அதை வைத்து, நகங்களைத் தேய்த்துச் சுத்தப்படுத்தினால், நகங்களில் காணப்படும் அழுக்குகள் நீங்கி நகங்கள் பளபளப்பாகும்.

* நகங்கள் உறுதியற்று உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே காரணம். எனவே, நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்.

பாத வெடிப்பு நீங்க...

* பாத வெடிப்பிருந்தால் பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை பெடிக்யூர் செய்து கொள்ளலாம்.

* உப்பு, ஷாம்பூ, எலுமிச்சைப்பழச் சாறு கலந்த வெந்நீரில் கால்களை ஊற வைத்துக் கழுவலாம்.

* அதிக வேலைகள் காரணமாக கால்களில் வலி எடுத்தால் கால்களை சுடுதண்ணீரில் ஊற வைத்தால் சரியாகும்.

* பாதத்தில் உள்ள வெடிப்பு நீங்க விளக்கெண்ணெய் ஒரு டீஸ்பூன், பன்னீர் இரண்டு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு ஒரு டீஸ்பூன் மூன்றையும் கலந்து வெந்நீரில் பத்து நிமிடங்கள் காலை ஊறவிட்டு, பின்பு இக்கலவையைப் பூசிவர வெடிப்பு நீங்கும்.

உன் மிருதுவான

பாதம் தரை

முத்தமிட்டு எழுப்பும்

உன் கொலுசுச் சத்தம்

என்னை பொறாமைப்பட வைக்கிறது!

எனக்கான உன் முத்தம்

தரைக்குக் கிடைப்பதனாலோ?

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 7 பிப் 2018