மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா?

ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா?

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று (பிப்ரவரி 7) கேப்டவுனில் நடைபெறவுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஆறு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் மூன்றாவது போட்டி இன்று கேப்டவுனில் உள்ள நியூலேண்ட் மைதானத்தில் இன்று மாலை 4.30 மணிக்குத் தொடங்குகிறது.

இந்த மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றால், தென்னாப்பிரிக்காவில் முதன்முறையாக மூன்று ஒருநாள் போட்டிகளைத் தொடர்ச்சியாக கைப்பற்றிய பெருமையை இந்திய அணி பெறும். இன்று போட்டி நடைபெறும் மைதானத்தில் தென்னாப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லா கடைசியாக விளையாடிய ஆறு ஒருநாள் போட்டிகளில் ஆவரேஜ் ஸ்கோர் ஆக 31.66 சேர்த்துள்ளார். அவர் இந்திய அணிக்கு எதிராக கடைசியாக விளையாடிய 10 ஒருநாள் போட்டிகளில் 50 ரன்களைக் கடக்கவில்லை. அம்லா ஓர் அணிக்கு எதிராக நீண்ட போட்டிகளில் அரைசதம் அடிக்காமல் விளையாடி வருவது இந்திய அணிக்கு எதிராகத்தான்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 7 பிப் 2018