மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

விமானச் சேவையைப் பயன்படுத்தாத இந்தியர்கள்!

விமானச் சேவையைப் பயன்படுத்தாத இந்தியர்கள்!

இந்தியாவில் 97 சதவிகித மக்கள் விமானச் சேவையைப் பயன்படுத்தியதில்லை என்று டெக்கான் அவியேசன் நிறுவனத்தின் தலைவர் ஜி.ஆர்.கோபிநாத் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 4) தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் இரண்டு நாட்கள் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், "இந்தியாவில் 97 சதவிகித மக்கள் இன்னும் விமானங்களில் பயணித்ததில்லை. சர்வதேச விமானங்களின் எண்ணிக்கையை விட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியத் தேவையுள்ளது. அடுத்த ஆறு மாதங்களில் எங்கள் நிறுவனம் 62 உள்நாட்டு விமான நிலையங்களைத் திறக்கவுள்ளது" என்றார். மேலும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஏர் ஏசியா நிறுவனத்தின் இந்திய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர் அமோர் அப்ரோல், "ஏர் ஏசியா நிறுவனம் வருங்காலத்தில் கவுகாத்தியில் இருந்து அண்டை நாடுகளுக்கு விமானச் சேவை வழங்க முயற்சிக்கும். இப்பகுதிக்கு சர்வதேச விமான நிலையங்கள் தேவையாக உள்ளன" என்றார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 6 பிப் 2018