மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

18 பேரில் ஒருவரை முதல்வராக்குவேன்!

18 பேரில் ஒருவரை முதல்வராக்குவேன்!

முதல்வராகும் ஆசை தனக்கு இல்லை எனக் கூறியுள்ள டிடிவி தினகரன், தன்னை நம்பி வந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களில் ஒருவரை முதல்வராக்குவேன் எனத் தெரிவித்துள்ளார்.

மீத்தேன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையின் கதிராமங்கலத்தில் இன்று (பிப்ரவரி 6) 264ஆவது நாளாகப் போராட்டம் நடந்துவருகிறது. இந்தப் போராட்டத்துக்குத் தனது ஆதரவைத் தெரிவிக்கும் விதமாக தினகரன் இன்று கதிராமங்கலத்துக்குச் சென்றார். வேளாண்மை தவிர வேறு எந்தப் பணியையும் டெல்டா பகுதிகளில் நடைபெறவிட மாட்டோம் என அவர்களிடம் தினகரன் உறுதியளித்தார். அப்போது மீத்தேன் எதிர்ப்புக் குழுவினர், மீத்தேன் அகதிகள் என்ற குறுந்தகட்டையும், ஹட்ரோகார்பன் அபாயங்கள் என்ற புத்தகத்தையும் அவரிடம் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “நாங்கள் இந்தப் பூமியைச் சேர்ந்தவர்கள். நாங்கள் நிம்மதியாக வாழ வேண்டுமென்றால் மீத்தேன் எடுக்கும் பணிகளை நிறுத்த வேண்டும். இந்தப் பகுதியை விவசாய மண்டலமாக அறிவிக்க வேண்டும். மீத்தேன் எதிர்ப்புக் குழுவுடன் இணைந்து நானும் போராடுவேன்” என்று பேசினார்.

துணைவேந்தர் லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், “தேர்தல் நடந்தால் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். எதிரணியில் உள்ள 6 பேரை ஒதுக்கிவிட்டு மீதமுள்ள எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் வந்தாலும் ஆட்சி மாற்றத்துக்கு வாய்ப்புள்ளது. நான் முதல்வராக வேண்டும் என்ற ஆசை இல்லை. என்னோடு துணையாக நின்ற 18 தியாகிகளில் ஒருவரை முதல்வராக்குவேன். மீண்டும் தேர்தல் வர வேண்டாம் என நினைக்கும் எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் மனம் திருந்தி வரலாம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

செவ்வாய் 6 பிப் 2018