மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

மோடி நடத்துவது ஒன் மேன் ஷோ!

மோடி நடத்துவது ஒன் மேன் ஷோ!

மோடி அரசாங்கம் என்பது ஒன் மேன் ஷோ என்று பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா விமர்சனம் செய்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் நரசிங்கபூர் எனுமிடத்தில் மிகப்பெரிய மின் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த மின் திட்டத்திற்காக மத்தியப் பிரதேச அரசு விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்திவருகிறது. இந்தத் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராடிவருகிறார்கள். இந்த விவசாயிகளுக்கு ஆதரவாக பாஜகவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா போராட்டம் நடத்திவருகிறார்.

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா இன்று (பிப்ரவரி 6) நரசிங்கபூர் சென்றார். விவசாயிகளுக்காக யஷ்வந்த் சின்ஹா நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பேசிய சத்ருகன் சின்ஹா, “நான் மட்டும் அல்ல பாஜகவில் உள்ள பெரும்பாலான எம்.பிக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், மோடி அரசாங்கம் என்பது ஒன் மேன் ஷோ என்றும், கட்சியானது மோடி அமித் ஷா என்ற இரு ராணுவ வீரர்களின் நிர்வாகமாகவும் இருக்கிறது எனக் கருதுகிறார்கள்” என்று விமர்சனம் செய்துள்ளார்.

தொடர்ந்து பேசும்போது, கட்சியிலும், ஆட்சியிலும் எம்.பி.க்களின், அமைச்சர்களின் பங்கு குறைந்துகொண்டேவருகிறது. மக்களில் பெரும்பாலானோருக்கு, அமைச்சர்கள் எந்தத் துறையைக் கையில் வைத்திருக்கிறார்கள், பொறுப்பு வகிக்கிறார்கள் என்பதுகூடத் தெரியாது. அப்படியே மக்களுக்குத் தெரிந்தால்கூட, அந்த அமைச்சர்கள் எதற்கும் தகுதியில்லாதவர்கள் என நினைத்துவிடுகிறார்கள் என்று சத்ருகன் சின்ஹா கூறியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 6 பிப் 2018