மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

B.E ன்னா பக்கோடா இன்ஞ்சினியரா: அப்டேட் குமாரு

B.E ன்னா பக்கோடா இன்ஞ்சினியரா: அப்டேட் குமாரு

தலைவர்கள் பிறந்தநாளுக்கு நல்லெண்ண அடிப்படையில வருசக்கணக்கா இருக்குற சிறைக்கைதிகளை ரிலீஸ் பண்றது வழக்கம். இது ரொம்ப நல்ல வழக்கம் தான். ஆனால் எடப்பாடி அறிவிச்சுருக்குற இந்த அறிவிப்புல என்ன ஒரு நகை முரண் இருக்கு பார்த்தீங்களா. ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பத்து வருசத்துக்கு மேல உள்ள சில கைதிகளை ரிலீஸ் பண்ண போறாராம். இதுல ப்யூட்டி என்னன்னா அந்தம்மா இறக்காம இருந்தா அவங்களும் சிறைகைதிகள் லிஸ்ட்ல தான் இருந்துருப்பாங்க. இதை நம்ம நெட்டிசன் ஒருத்தர் ட்விட்டா போட்ருக்காரு. இதை பார்த்தா எடப்பாடி ரியாக்‌ஷன் என்னவா இருக்கும்னு திங்க் பண்ணிட்டு இருக்கேன். நீங்க அப்டேட்டை பாருங்க

@Kozhiyaar

உங்களை எளிதில் தவிர்க்க முடிகிறதெனில், உங்களின் முக்கியத்துவம் என்ன என்பதை நீங்களே உணர்ந்துகொள்ளுங்கள்!!

@amyarun

முடியாததை முடித்து வைப்பவர் தான் பிரதமர் மோடி - தமிழிசை

நீங்க கஜானாவ பத்திதான சொல்லுறீங்க முடிச்சுருவாருனு

@Surya Xavier

சார் வணக்கம்.. எனக்கு கல்யாணம் சார்

நீடூழி வாழ்க தம்பி

மெசஞ்சரில் இன்விட்டேசன் அனுப்பிருக்கேன் சார்

மெசஞ்சரில் 10,000ரூ ஸ்கிரீன் சாட் எடுத்து மொய் அனுப்பிருக்கேன் தம்பி.

@ajmalnks

அமைச்சராக்குவதாக ஆசைக்காட்டி 80 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஜெ.தீபா மீது முட்டை மொத்த வியாபாரி புகார்..!!!

மூட்டையை நம்பி முட்டையை கொடுத்து ஏமாந்திட்டியே ராசா...

@Chellakutty_Dee

இன்னும் கொஞ்ச நாள்ல தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் முருகனையும் எதாவது ஜாதி

பேரை சொல்லி பிரிச்சுருவாங்க பாருங்களேன் இது கண்டிப்பா நடக்கும்

@samester_twitz

வேலையில்லாமல் இருப்பதைவிட பக்கோடா விற்கலாம் - அமித் ஷா

அப்போ எல்லோரும் பக்கோடா விக்க ஆரம்பிச்சிருவாய்ங்க ...

எல்லோரும் விக்க ஆரம்பிச்சிட்டா யாரு வாங்குறது

@rahimgazali

B.E ன்னா என்னன்னு கேட்டால் இனி பக்கோடா இஞ்சினியர்ன்னு சொல்வாங்க போல...

@nandhu_twitts

சிலர் வாஸ்து சரியில்லை என்று வீடு மாற்றுவார்.,

பலர் தோஸ்து சரியில்லை என்று மனதை ஆற்றுவார்...!!

@sultan_Twitz

வீட்டில் இருக்கும் டஸ்ட் பின்களில் முதன்மையான இடத்தை ஆக்கிரமிக்கிறது "ப்ரிட்ஜ்"...!

@அன்சாரி மஸ்தான்

டாக்டர்: இந்த மருந்த காலைல வெறும் வயத்துல சாப்டுங்க..

வந்தவர்: ஒரு பனியன்கூட போட்ருக்ககூடாதா டாக்டர்.?

@BoopatyMurugesh

மாண்புமிகு அம்மா ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு சிறை கைதிகளை விடுதலை செய்ய முடிவு - எடப்பாடி

உயிரோட இருந்திருந்தா உங்க அம்மாவும் அந்த சிறை கைதில ஒரு ஆளுங்கிறத மறந்துறாதப்பு..

@SKtwtz

வாடகை சைக்கிள் ஓட்டிய பொழுதுகூட இருந்த ஆரோக்கியம் இப்போ சொந்த காரில் செல்லும்போது இல்லை பலருக்கு...

@manipmp

மருந்துகளும் ஷாம்புகளும் வந்துவிட்டன.

ஒரு முறை கூட

கரத்தால் பேன் பார்க்கப்பட்ட

ஆன்மிக அனுபவம் கிட்டாத

ஒரு தலைமுறையே வந்துவிட்டது

@selvaraj851

காட்டெருமை,யானையெலாம் ஆட்டோகிராப் சேரன் மாதிரி ஞாபகம் வருதே! ஞாபகம் வருதேனு அடிக்கடி அதோட சொந்த ஊருக்கு வருது, அங்க மக்கள் வசிச்சுக்கிட்டு இருக்காய்ங்கே!

@iam_susi

பெரும்பாலும் அலுவலகங்களில் பேப்பர் வெயிட்டாக ஸ்மார்ட் போனே பயன்படுத்தபடுகிறது.

என்னடா இது ஸ்மார்ட் போனுக்கு வந்த சோதனை.

Troll Trousers 2.0

உன் பையன் எப்படி கட்டைவிரல் சப்புற பழக்கத்தை விட்டான்?

பெரிய விஷயம் இல்ல... இடுப்புல நிக்காத தொள தொள டவுசரை போட்டு விட்டேன்.... அப்பப்ப டவுசர் நழுவாம இருக்க இரண்டு கையாலையும் பிடிச்சு பிடிச்சு கட்டைவிரல் பழக்கத்தை மறந்துட்டான்....

இப்படியே விலைவாசி, வேலையின்மை, ஏழ்மை, ஏற்றத்தாழ்வு எல்லாம் மக்கள் மறக்கணும்னா....

ஆண்டாள், அயோத்தி, பசுவதை, பத்மாவதி, பாகிஸ்தான், தலாக், என்று மாற்றி மாற்றி தொள தொள டவுசரை மக்களுக்கு மாட்டி விட்டா...

மக்கள் அனைத்தையும் மறந்து டவுசரைப் பிடிச்சுக்கிட்டு அலைவாங்க...

@vishnut87

இன்னும் நம்ம நாட்டுல நாப்கின் வாங்க கூட முடியாம பழைய துணிகளை பயன்படுத்தும் ஏழைகள்(பெண்கள்) இருக்குறாங்க.. இலவச ஸ்கூட்டிய விட இலவச நாப்கின் அத்தியாவசியம்..

@Tamilsuhi

எது மகிழ்ச்சி என்ற

ஓர் நீண்ட தேடலில்

முன் நாளில் துன்பம் என

தூக்கி வீசப்பட்ட ஒன்று

முன் நிற்கிறது

@Ashok_Apk

அச்சடிக்கப்பட்ட காந்திக்காக அலைய விடுது வாழ்க்கை...

@kanavukadhalan

நாம் பக்குவமடையும் போது தான்

சில விஷயங்கள் புரியும்

முப்பது ரூபாய் கடிகாரமும் சரி

மூன்று லட்சம் ரூபாய் கடிகாரமும்

சரி.... ஒரே நேரம் தான் காட்டும்!!!

@senthilcp

ஜி.எஸ்.டி வரி வசூலில் தமிழகத்திற்கு 2-ம் இடம்

நேர்மைக்கே உண்டான கோபத்துல வண்டை வண்டையா திட்னாலும் வரியை கரெக்டா கட்டீடுவான் தமிழன்

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 6 பிப் 2018