மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

படக்குழு கொடுத்த ஸ்பெஷல் கிப்ட்!

படக்குழு கொடுத்த ஸ்பெஷல் கிப்ட்!

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவடைந்துள்ளது. படத்தின் டைட்டிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். டிரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் பூஜை செப்டம்பர் மாதம் நடைபெற்றது. சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு இன்று நிறைவடைந்துள்ளது. படத்திற்கு லட்சுமி என பெயரிட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடனம் பற்றிய படமாக உருவாகும் இந்தப் படத்தின் கதை ஸ்டெப் அப் என்ற ஹாலிவுட் தொடரைத் தழுவி எடுக்கப்படுவதாக சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியாகியது.

பிரபுதேவா இதற்கு முன் விஜய் இயக்கத்தில் நடித்திருந்த தேவி திரைப்படம் வரவேற்பைப் பெற்றிருந்தது. இரண்டாவது முறையாக இந்தக் கூட்டணி இப்படத்தில் இணைந்துள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்ததையொட்டி படக்குழு பிரபுதேவாவுக்குப் பரிசு ஒன்றை வழங்கியுள்ளது. பிரபுதேவாவின் ஓவியமான அந்தப் பரிசு அவரை நெகிழ்வடையச் செய்துள்ளது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

செவ்வாய் 6 பிப் 2018