மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

வெங்காயம் விலை 30% உயர்வு!

வெங்காயம் விலை 30% உயர்வு!

வெங்காய ஏற்றுமதிக்கான தடைகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, மகாராஷ்டிர மாநிலத்தில் வெங்காயத்தின் விலை 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

2018-19 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு வேளாண் பொருட்கள் மீதான ஏற்றுமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து மகாராஷ்டிராவில் வெங்காயத்தின் விலை 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் டன் ஒன்றுக்கு 850 டாலராக இருந்த வெங்காயத்தின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை ஜனவரியில் 700 டாலராகக் குறைக்கப்பட்டிருந்தது. இந்தக் கட்டுப்பாடு பிப்ரவரி 20 வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்ச ஏற்றுமதி விலைக் குறைப்பால் மகாராஷ்டிர மாநிலத்தில் வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.4 முதல் ரூ.5 வரை உயர்ந்துள்ளது. நாசிக் மாவட்டத்தில் கிலோ ஒன்றுக்கு ரூ.20 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பட்ஜெட் தாக்கலில் அருண் ஜேட்லி கூறுகையில்,” இந்தியாவில் உற்பத்தியாகும் வேளாண் பொருட்களின் தற்போதைய ஏற்றுமதி மதிப்பு 30 பில்லியன் டாலராக உள்ளது. ஆனால் இந்தியாவின் வேளாண் ஏற்றுமதித் திறன் 100 பில்லியன் டாலர் ஆகும். விவசாயிகளின் நலன் கருதி வேளாண் பொருட்களின் ஏற்றுமதி தாராளமயமாக்கப்படும்“ என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சரான சுரேஷ் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், ’புதிய பட்ஜெட்டில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதிக்குச் சிறப்பான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 6 பிப் 2018