மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

பீட்டா வழக்கு: 12ஆம் தேதி விசாரணை!

பீட்டா வழக்கு: 12ஆம் தேதி விசாரணை!

கர்நாடகாவின் பாரம்பரிய விளையாட்டான கம்பளா போட்டிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை பிப்ரவரி 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

கம்பளா போட்டியின் போது எருதுகள் துன்புறுத்தப்படுகின்றன, காயமடைந்த எருதுகள் குறித்து

யாரும் கவலை கொள்வதில்லை என்பன போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து கம்பளாவுக்கு தடை விதிக்க வேண்டும் என பீட்டா அமைப்பு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தது. கடந்த ஆண்டு, நவம்பர் 18ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.முகர்ஜி மற்றும் நீதிபதி கே.சோமசேகர் ஆகியோர் கம்பளா பந்தயத்துக்குத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

கம்பளாவுக்கு விதித்த தடையை விலக்கக்கோரி, 'தட்சிண கன்னடா கம்பளா குழு' கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த மனு மீதான விசாரணையின்போது, ஜல்லிக்கட்டு மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை மனுதாரர் காத்திருக்க வேண்டும் எனக்கூறி விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் இயற்றக் கோரி 2017ஆம் ஆண்டு ஜனவரி 16 முதல் 23 வரை தன்னெழுச்சிப் போராட்டம் நடைபெற்றது. சென்னை மெரினாவில் மட்டும் லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியாக அதற்கு வெற்றி கிடைத்தது. கர்நாடகாவின் பாரம்பரிய விளையாட்டான கம்பளா மீதான தடையை நீக்குமாறு மாணவர்களும் இளைஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2017 பிப்ரவரி 10ஆம் தேதி, கம்பளா அவசரச் சட்ட மசோதா கர்நாடக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. பிப்ரவரி 13ஆம் தேதி கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மை ஆதரவோடு கம்பளா சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கர்நாடகாவில் கம்பளா போட்டிகள் நடைபெற்றுவந்தன.

அதைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டுக்கு எதிராகவும் கம்பளா போட்டிகளுக்கு எதிராகவும் பீட்டா மீண்டும் வழக்கு தொடர்ந்தது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 6 பிப் 2018