மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

பிரபாஸ் படம் வெளியாவதில் தாமதம்!

பிரபாஸ் படம் வெளியாவதில் தாமதம்!

பிரபாஸ் தற்போது நடித்துவரும் 'சாஹோ' படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக விசேஷ பயிற்சிகள் எடுப்பதால் இப்படம் இந்த ஆண்டு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பாகுபலி, பாகுபலி 2 வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் நடித்துவரும் புதிய படம் 'சாஹோ'. இந்தப் படமும் அதிக பொருட்செலவில் தயாராகிறது. இப்படத்துக்காக பிரபாஸ் தன் உடலமைப்பையே மாற்றி, மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் இந்தி நடிகை ஷ்ரத்தா கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் படம் தயாராகிவரும் இப்படத்தின் மூன்றாவது கட்டப் படப்பிடிப்பு அடுத்த மாதம் துபாயில் தொடங்குகிறது. இறுதிக் கட்டப் படப்படிப்பு முடிந்து படம் இந்தாண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து படக்குழு தி டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் “உயரமான கட்டிடங்களில் பிரபாஸ் - நீல் நிதின் முகேஷ் மோதும் அதிரடிச் சண்டைக் காட்சிகள் துபாயில் படமாக்கப்படுகின்றன. இதற்காக பிரபாஸ் படக்குழுவினருடன் 60 நாட்கள் துபாயில் தங்கியிருந்து படப்பிடிப்பில் பங்கேற்கவுள்ளார். குறிப்பிட்ட இந்த சண்டைக் காட்சியில் நடிப்பதற்காகச் சில பிரத்யேகப் பயிற்சிகளை அவர் மேற்கொண்டுள்ளார். இதன் பின்னரே சண்டைக் காட்சியில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை யுவி புரொடக்‌ஷன் அடுத்த வருடம் பிரம்மாண்டமாக வெளியிட இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இயக்குநர் சுஜீத், சில காட்சிகளை ரீஷூட் செய்யவிருப்பதாகவும்" தெரிவித்துள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 6 பிப் 2018