மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

விஜயகாந்த் நிழலில் மதுர வீரன்!

விஜயகாந்த் நிழலில் மதுர வீரன்!

தமிழ் சினிமாவில் 1977க்குப் பின் எம்.ஜி.ஆர், சிவாஜி இருவரும் ஆதிக்கம் செலுத்தவில்லை. கமல், ரஜினி என இருவரது ஆதிக்கத்தில் தமிழ் சினிமா இருந்தபோது தனக்கென தனிப்பாதையில் ராஜநடை போட்டவர் விஜயகாந்த். ஆக்‌ஷன், சென்டிமெண்ட் படங்களில் நடித்து வசூலில் வெற்றிகரமான ஹீரோவாக வலம் வந்த, இவரது மகன் சண்முகபாண்டியன் நாயகனாக நடித்த முதல் படம் 2015இல் ரீலீஸ் ஆனது. மகனை புரமோட் செய்வதற்காக விஜயகாந்த் கெளரவ தோற்றத்தில் நடித்திருந்தார். இப்படி சண்முக பாண்டியனுக்குக் கிடைத்த அறிமுகத்துக்குப் பின் ரிலீஸாகியிருக்கும் திரைப்படம் மதுர வீரன்.

பிப்ரவரி 2 அன்று சண்முக பாண்டியன் நடித்துள்ள மதுர வீரன் ரீலீஸ் ஆனது. வழக்கம் போல விஜயகாந்த் ரசிகர்கள், கட்சிக்காரர்கள் வருகையால் முதல் காட்சிக்கு நல்ல ஒப்பனிங் கிடைத்தது. அடுத்தடுத்த நாட்களில் பெரும் வசூல் பின்னடைவைச் சந்தித்துள்ளது மதுர வீரன். தமிழ்நாடு முழுவதும் முதல் நாளில் சுமார் 50 லட்சத்திற்கு குறைவாக மொத்த வசூல் செய்தது மதுர வீரன்.

பல ஊர்களில் வேறு புதிய படங்கள் திரையிட படம் இல்லாத காரணத்தால் வேறு வழியின்றி மதுர வீரன் ஓட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது. கடந்த மூன்று நாட்களில் சுமார் ஒரு கோடி ரூபாயை மட்டுமே மொத்த வசூல் செய்திருக்கிறது மதுர வீரன்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 6 பிப் 2018