மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

பயணச்சீட்டு சர்ச்சை: போக்குவரத்துத் துறை விளக்கம்!

பயணச்சீட்டு சர்ச்சை: போக்குவரத்துத் துறை விளக்கம்!

ஒரு நாள் பயணச்சீட்டு மற்றும் மாதாந்தரப் பயணச்சீட்டின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர் டேவிதார் அறிவித்துள்ளார்.

தமிழக அரசு கடந்த ஜனவரி 20ஆம் தேதி பேருந்துக் கட்டணத்தைக் கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்த்தியது. இந்தக் கட்டண உயர்வைத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தி, கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, ஜனவரி 28ஆம் தேதி உயர்த்தப்பட்ட கட்டணத்தில் 1 ரூபாய் மட்டும் குறைக்கப்பட்டது. பேருந்துக் கட்டணம் மாற்றியமைக்கப்பட்ட பிறகு, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் வழங்கப்படும் ஒரு நாள் பயணச்சீட்டு கட்டணம் நிர்ணயிக்கப்படாமல், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து, ஒரு நாள் பயணச்சீட்டுக் கட்டணம் 50 ரூபாயிலிருந்து 80 ரூபாயாகவும், மாதாந்தரப் பயணச்சீட்டுக் கட்டணமும் 1000 ரூபாயிலிருந்து, 1300 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டதாக இன்று காலை தகவல் வெளியானது. மேலும், வரும் 8ஆம் தேதியில் இருந்து அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கட்டண உயர்வு என்ற செய்தியை போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் டேவிதார் மறுத்துள்ளார். பேருந்துக் கட்டண உயர்வு எனப் பரவும் செய்தி முற்றிலும் தவறானது என விளக்கமளித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

செவ்வாய் 6 பிப் 2018