மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

அப்பல்லோவில் அமைச்சர் அனுமதி!

அப்பல்லோவில் அமைச்சர் அனுமதி!

உடல்நலக்குறைவு காரணமாக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சராக இருப்பவர் திருச்சி கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ வெல்லமண்டி நடராஜன். அதிமுகவிலிருந்து தினகரன் ஒதுக்கப்பட்ட பிறகு எடப்பாடி-பன்னீர் அணிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இன்று (பிப்ரவரி 6) மூச்சுத்திணறல் ஏற்படவே சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

எனினும் அமைச்சருக்கு என்ன பாதிப்பு என்பது குறித்தும், அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. தற்போது அமைச்சர் நலமாக உள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 6 பிப் 2018