ஓரியோவை மிஞ்சிய நவ்கெட்!


ஆன்ட்ராய்டு ஓ.எஸ்.களில் புதிய வெர்ஷனான ஓரியோ 8.0 மொத்தமாக ஒரு சதவிகிதப் பயனர்களை மட்டுமே எட்டியுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு ஓ.எஸ்.ஸில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய வெர்ஷன்கள் வெளியாவது வழக்கம். 2016ஆம் ஆண்டு வெளியான நவ்கெட் ஓ.எஸ். ஒட்டுமொத்தப் பயனர்களில் 28.5 சதவிகிதப் பயனர்களைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளது.
கடந்த மாதம் வரை 6.0 மார்ஸ்மெல்லோ வெர்ஷன்தான் 28.6 சதவிகிதப் பயனர்களை பெற்று முதலிடம் பெற்றிருந்தது. ஆனால் இந்த மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் அதன் பயனர்கள் எண்ணிக்கை 28.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. அது மட்டுமின்றி, புதிதாக வெளியான 8.0 நவ்கெட் வெர்ஷன் ஒரு சதவிகித பயனர்களை மட்டுமே இதுவரை எட்டியுள்ளது. ஆனால் நவ்கெட் வெர்ஷன் ஆனது அதன் சிறப்பம்சங்கள் மூலம் பயனர்களை அதிகம் கவர்ந்துள்ளது. எனவே விரைவில் அதிக பயனர்களைப் பெற்ற இயங்குதளமாக ஓரியோ மாற வாய்ப்புள்ளது.
தற்போதுள்ள மாடல்களில் அப்டேட் செய்து பெறக்கூடியதாக இருந்தால் பெரும்பாலான பயனர்கள் அதனைப் பெற அதிக ஆர்வம் காட்டுவர். அவ்வாறு இல்லாமல் புதிய மாடல்களில் மட்டும் இந்த 8.0 வெர்ஷன் வெளியாகும் என்ற நிலையிருந்தால் பெரும்பாலும் பயனர்கள் கவனம் ஈர்ப்பது கடினம்.