மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

இனி ஒரு நாள் பஸ் பாஸ் ரூ.80!

இனி ஒரு நாள் பஸ் பாஸ் ரூ.80!

ஒரு நாள் பயணச்சீட்டுக் கட்டணம் 50 ரூபாயிலிருந்து 80 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக இன்று (பிப்ரவரி 6) வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில், ஒரே நாளில் மூன்று அல்லது நான்கு பேருந்துகளில் மாறிச் செல்வதற்கும், நீண்ட தூரம் பயணம் செய்வதற்கும் 50 ரூபாய் கட்டணம் கொண்ட ஒரு நாள் பயணச்சீட்டு மாநகரப் போக்குவரத்துக் கழகம் மூலம் வழங்கப்பட்டு வந்தது. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையில் அந்தப் பயணச்சீட்டை பயன்படுத்தலாம். தினமும் சராசரியாக 5 லட்சம் பேர் ஒரு நாள் பயணச்சீட்டைப் பயன்படுத்தி வந்தனர். இதனால், பயணிகளின் கட்டணச் செலவு வெகுவாகக் குறைந்தது.

தமிழக அரசு கடந்த ஜனவரி 20ஆம் தேதி பேருந்துக் கட்டணத்தைக் கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்த்தியது. இந்தக் கட்டண உயர்வைத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தி, கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, ஜனவரி 28ஆம் தேதி உயர்த்தப்பட்ட கட்டணத்தில் 1 ரூபாய் மட்டும் குறைக்கப்பட்டது. பேருந்துக் கட்டணம் மாற்றியமைக்கப்பட்ட பிறகு, ஒரு நாள் பயணச்சீட்டு கட்டணம் நிர்ணயிக்கப்படாமல், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஒரு நாள் பயணச்சீட்டின் கட்டணம் 50 ரூபாயிலிருந்து 80 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கட்டண உயர்வுக்கு முன்பு மாதாந்தர பாஸ் வைத்திருப்பவர்கள் அதில் உள்ள தேதி வரை பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாதாந்தரப் பயணச்சீட்டுக் கட்டணமும் 1000 ரூபாயிலிருந்து, 1300 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு வரும் 8ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 6 பிப் 2018