மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

வெறுப்புப் பரப்புரைகளுக்கு முஸ்லிம்கள் பலியாகிவிடக் கூடாது!

வெறுப்புப் பரப்புரைகளுக்கு முஸ்லிம்கள் பலியாகிவிடக் கூடாது!

வெறுப்புப் பரப்புரைகளுக்குப் பலியாகிவிடாமல் நாட்டு முன்னேற்றத்திலும், சமய நல்லிணக்கத்திலும் கவனம் செலுத்த வேண்டுமாறு ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் என்ற அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. சென்னையில் கடந்த 4ஆம் தேதி நடத்தப்பட்ட மண்டல மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்று இவ்வாறு கேட்டுக்கொண்டிருக்கிறது.

ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் என்னும் அமைப்பு அகில இந்திய அளவில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டுவரும் இஸ்லாமிய இயக்கமாகும். இந்த அமைப்பானது சமுதாயப் பிரச்னைகள், மக்கள் சேவை, பயிற்சி, கட்டுப்பாடு என்ற திட்டமிடலின் அடிப்படையில் தமிழக அளவிலும் இந்திய அளவிலும் பல்வேறு பணிகளைச் செய்துவருகிறது.

அதன் ஒரு பகுதியாகத் தமிழகம் முழுவதும் மண்டல மாநாடுகளை நடத்தத் திட்டமிட்டு, திருச்சியிலும், வாணியம்பாடியிலும் மாநாடுகளை நடத்தியது. அதனைத் தொடர்ந்து சென்னையில் கடந்த 4ஆம் தேதி மாநாடு நடைபெற்றது.

மக்களுக்குச் சான்று வழங்குங்கள் என்ற கருப்பொருளை மையப்படுத்தி நடைபெற்ற இந்த மாநாட்டில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத் தலைவர் ஏ.ஷப்பீர் அஹமத், மாநிலப் பொதுச் செயலாளர் மௌலவி ஹனீஃபா உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.

இறை மார்க்கத்தை மேலோங்கச் செய்யும் பணியில் முஸ்லிம் சமுதாயத்தை தயார்படுத்தும் இந்த மாநாட்டில் முஸ்லிம் சமுதாயத்திற்கான வழிகாட்டுதல்கள் குறித்தும், மாநில, மத்திய அரசுகளுக்குச் சில கோரிக்கைகளை வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தத் தீர்மானங்கள் இப்போது அரசியல் அரங்கில் கவனம் பெற்றிருக்கின்றன.

“முஸ்லிம் சமுதாயம் மக்களுக்குச் சான்று வழங்கும் மகத்தான பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். தங்களுக்குள் கருத்து வேறுபாடுகளால் மோதிக்கொள்ளாமல், கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் ஒன்றிணைந்து செயல்படுமாறு முஸ்லிம் சமுதாயத்திற்கு அழுத்தமான கோரிக்கையை இம்மாநாடு முன்வைக்கின்றது.

வாதப் பிரதிவாதங்கள் நடத்தி நமது ஆற்றல்களை வீணடித்துவிடாமல் அறிவுத்தளத்தில் இந்த உலக மக்களை வழி நடத்திச் செல்லும் தீரத்துடன் இஸ்லாமிய அமைப்புகள், இயக்கங்கள் செயல்பட வேண்டுமாய் வலியுறுத்துகின்றோம்.

வகுப்புவாதம் தலைதூக்கிவரும் இன்றைய சூழலில் முஸ்லிம் சமுதாயத்தின் பொறுப்புகளைத் தொண்டர்களுக்கு உணர்த்துவதுடன், கருத்துக் களத்தில் அவர்களை நெறிப்படுத்தி விழுமம் சார்ந்த அரசியலுக்கு வித்திடுமாறு இஸ்லாமிய அரசியல் அமைப்புகளை இந்த மாநாடு விரும்பிக் கேட்டுக்கொள்கிறது.

வெறுப்புப் பரப்புரைகளுக்குப் பலியாகிவிடாமல் நாட்டு முன்னேற்றத்திலும், சமய நல்லிணக்கத்திலும் நாட்டு மக்கள் அனைவரும் கவனம் செலுத்த வேண்டுமாறு இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது’’ என்று இம்மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 6 பிப் 2018