மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

அரசுத் துறையில் பெருகும் வேலைவாய்ப்புகள்!

அரசுத் துறையில் பெருகும் வேலைவாய்ப்புகள்!

கடந்த இரண்டு ஆண்டுகளில் மத்திய அரசுத் துறைகளில் 2.3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 2018-19 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கை வாயிலாகத் தெரிய வந்துள்ளது.

2016-17 நிதியாண்டின் மார்ச் மாத நிலவரப்படி, அரசுத் துறைகளில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை 32.52 லட்சமாக இருந்தது. அதன் பின்னர் 2.53 லட்சம் பணியிடங்கள் புதிதாக நிரப்பப்பட்டு, மொத்த அரசுப் பணியிடங்களின் எண்ணிக்கை 34.8 லட்சமாக உயர்ந்துள்ளது. 2017ஆம் ஆண்டில் மட்டும் 2.27 லட்சம் பணியிடங்கள் அரசின் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட்டுள்ளன. வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாய நலத் துறையில் வரும் மார்ச் 1ஆம் தேதிக்குள் 1,944 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டில் இத்துறையின் பணியிடங்களின் எண்ணிக்கை 3,996 ஆக இருந்தது. கால்நடைப் பராமரிப்பு, பால் வளம் மற்றும் மீன் வளர்ப்புத் துறையில் உருவாக்கப்படும் (2018 மார்ச் வரை) வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 1,519 ஆக இருக்கும்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

செவ்வாய் 6 பிப் 2018