மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

கோலிவுட்டில் பேட்மேன் சேலஞ்ச்!

கோலிவுட்டில் பேட்மேன் சேலஞ்ச்!

பாலிவுட்டில் பரவிவரும் பேட்மேன் சேலஞ்சை கோலிவுட்டில் ஜி.வி.பிரகாஷ் தொடங்கி வைத்துள்ளார்.

மலிவு விலையில் சேனிடரி நேப்கின் தயாரிக்கும் எந்திரத்தை வடிவமைத்த கோவையைச் சேர்ந்த அருணாசலம் முருகானந்தத்தின் வாழ்க்கை வரலாறு பேட்மேன் என்ற பெயரில் தயாராகியுள்ளது. சேனிடரி நேப்கின் பற்றி பொதுப்புத்தியில் உள்ள மோசமான அபிப்ராயங்களை மாற்றும் விதமாக பாலிவுட் பிரபலங்கள் நேப்கினோடு புகைப்படம் எடுத்து பகிரலாமே என அருணாசலம் முருகானந்தம் சவால் விடுக்க அக்‌ஷய் குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் என படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அதை நிறைவேற்றி மேலும் பல பிரபலங்களை இதில் கலந்துகொள்ள வேண்டுகோள் விடுத்தனர். இதனால் பல்வேறு பாலிவுட் பிரபலங்கள், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி என இந்த சவால் பிரபலமானது. மேலும் பொதுமக்களும் பெருவாரியாக இந்த சவாலை ஏற்று தங்கள் புகைப்படங்களைப் பகிர்ந்துவருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 6 பிப் 2018