மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

வரி வசூலை ஊக்குவித்த சீர்திருத்தங்கள்!

வரி வசூலை ஊக்குவித்த சீர்திருத்தங்கள்!

பணமதிப்பழிப்பு உள்ளிட்ட சில அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் மறைமுக வரி வாயிலான அரசின் வருவாய் ரூ.90,000 கோடியாக அதிகரித்துள்ளதாக நிதித் துறை தெரிவித்துள்ளது.

அகமதாபாத் இந்திய மேலாண்மை நிறுவனத்தில் பிப்ரவரி 5ஆம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய நிதித் துறைச் செயலாளரான ஹஸ்முக் ஆதியா பேசுகையில், “பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொண்ட பிறகு வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையும், வரி வருவாயும் கணிசமாக அதிகரித்துள்ளது. வரி வருவாயை நாம் கூர்ந்து நோக்கினால், கார்பரேட் மற்றும் அதிக சொத்துமதிப்பு கொண்ட தொழிலதிபர்களிடமிருந்து அதிக வரி வசூலாகியுள்ளது தெரிய வருகிறது. கார்பரேட் நிறுவனங்கள் புதிதாக உற்பத்தி நிறுவனங்கள் தொடங்கி தொழில் மேற்கொள்வதை விட, தற்போது பங்குச் சந்தை மற்றும் பத்திரங்களில் முதலீடு செய்யவே அதிகமாக விரும்புகின்றன.

பணமதிப்பழிப்பு உள்ளிட்ட சீர்திருத்த நடவடிக்கைகளால் அரசின் மறைமுக வரி வசூல் ரூ.90,000 கோடிக்கும் மேல் உயர்ந்துள்ளது. எனினும், சரக்கு மற்றும் சேவை வரி புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் அரசின் வரி வருவாய் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கின்றன. எனவே நிதிப் பற்றாக்குறை இலக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மறைமுக வரி வாயிலான அரசின் வருவாய் ரூ.50,000 வரையில் குறைவதற்கான வாய்ப்புள்ளது. அதேபோல, ஸ்பெக்ட்ரம், ஈவுத்தொகை உள்ளிட்ட வரியில்லா இதர வருவாய்களும் அரசுக்குக் குறையும் நிலை உள்ளது. இதனால் வரியில்லா இதர வருவாயில் ரூ.50,000 வரையில் அரசுக்கு இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அரசு இதில் அதிகக் கவனம் செலுத்தும்” என்றார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 6 பிப் 2018