மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

பக்கோடா விற்பவர்களைப் பிச்சைக்காரர்கள் என்பதா?

பக்கோடா விற்பவர்களைப் பிச்சைக்காரர்கள் என்பதா?

'வங்கிக் கடன் மூலம் ஒருவர் பக்கோடா விற்றால்கூட நாளொன்றுக்கு இருநூறு ரூபாய் சம்பாதிக்க முடியும் ' என்று மோடி கூறியதைத் திரித்து பக்கோடா விற்பவர்களை பிச்சைக்காரர்களுடன் ஒப்பிடுவது கண்டிக்கத்தக்கது என ப.சிதம்பரத்திற்கு தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்தார். அப்போது, "நாட்டில் வேலையின்மையைப் பற்றி பேசுகிறார்கள். இந்தத் தொலைக்காட்சி நிலையத்திற்கு வெளியே நின்று பக்கோடா விற்பனை செய்வதுகூட வேலைவாய்ப்புதான்" என்று கூறியிருந்தார்.

மோடியின் இந்தக் கருத்துக்கு அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி நாடு முழுவதிலும் இளைஞர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி பெங்களூரில் மோடி கலந்துகொண்ட பொதுக் கூட்டத்திலும், அவர் வருவதற்கு முன்பே இளைஞர்கள்ப ட்டமளிப்பு ஆடையை அணிந்து மோடி பக்கோடா, அமித் ஷா பக்கோடா, எடியூரப்பா பக்கோடா என்ற கோஷங்களுடன் பக்கோடா விற்று தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இவர்களை பெங்களூர் காவல்துறையினர் கைது செய்து அங்கிருந்து வெளியேற்றினர்.

இந்நிலையில் இது குறித்து பேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப.சிதம்பரம், பிச்சை எடுப்பவர்கள்கூடத்தான் சம்பாதிக்கிறார்கள், இதை வேலைவாய்ப்பு என்று கூற இயலுமா என்று கேள்வி எழுப்பியிருந்தார். சுய வேலை என்பது வேறூ, வேலைவாய்ப்பை அரசு ஏற்படுத்துவது என்பது வேறு என்று தன் கருத்தௌ சிதம்பரம் விளக்கினார்.

ப.சிதம்பரத்தின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக பாஜக தமிழக தலைவர் நேற்று (5 பிப்ரவரி) வெளியிட்டுள்ள அறிக்கையில், "20 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அரசின் முக்கிய அமைச்சராகப் பணியாற்றிய ப.சிதம்பரம் தமிழ்நாட்டுக்குச் செய்தது என்ன? அவரை நாடாளுமன்ற உறுப்பினராக அனுப்பிய சிவகங்கைக்கும் அதை ஒட்டிய ராமநாதபுரம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கும் அவர் கொண்டு வந்த ஒரு உருப்படியான பெரிய திட்டத்தைச் சொல்ல முடியுமா? அங்கே வங்கிகளையும், 'ஏடிஎம்' சென்டர்களையும் கொண்டுவந்ததை தவிர சிதம்பரம் வேறு என்ன செய்தார்?

வேலையின்றி இருப்போர்க்கு உதவி கிடைக்கும் வங்கிக் கடன் மூலம் ஒருவர் தெருவில் பக்கோடா விற்றால்கூட தினசரி ரூ.200 பெற முடியம் என்று கூறியதைத் திரித்துக் கூறி , பக்கோடா விற்பவர்களை பிச்சைக்காரர்களுக்கு சமமாக ஒப்பிட்ட செட்டிநாடு சீமான் கண்களுக்கு சுய வேலைவாய்ப்பு என்பது கேவலமாகத் தோன்றுவது ஏன்?

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 6 பிப் 2018