மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

கட்டண உயர்வு: பிப்.13ல் கண்டனக் கூட்டங்கள்!

கட்டண உயர்வு: பிப்.13ல்  கண்டனக் கூட்டங்கள்!

கட்டண உயர்வை முழுமையாக திரும்பப் பெறக் கோரி வரும் 13ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் கண்டனக் கூட்டம் நடைபெறும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், கட்டண உயர்வை ஒரு ரூபாய் வரை குறைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தமிழகம் முழுவதும் மறியல் போராட்டங்கள் நடத்தின. அரசு இதற்கு எவ்வித எதிர்வினையும் ஆற்றவில்லை.

இதையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் இன்று (பிப்ரவரி 6) அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன்,மமக ஜவாகிருல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேருந்துக் கட்டண உயர்வுக்கு எவ்வகை போராட்டத்தை முன்னெடுக்கலாம் என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. கட்டண உயர்வு தொடர்பாக மூன்று தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், "அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முதல் தீர்மானம், பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து தமிழக முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் வரும் 13ஆம் தேதி கண்டனக் கூட்டம் நடைபெறும். அனைத்துக் கட்சித் தலைவர்களும் பல்வேறு மாவட்டங்களில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் கண்டனக் கூட்டத்தில் பங்கேற்பர். யார் யார் எங்கெங்கு பங்கேற்க உள்ளனர் என்பதற்கான பட்டியலை விரைவில் வெளியிட உள்ளோம்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்த அவர், "இரண்டாவது தீர்மானம், பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடி சிறையில் இருக்கக் கூடிய மாணவர்கள், தோழர்களை விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.

மூன்றாவது தீர்மானம், போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக உயர் நீதிமன்றம் உருவாக்க நினைத்த சகஜ நிலைமைக்குத் திட்டமிட்ட வகையில் குந்தகம் விளைவிக்க முயற்சிப்பதை இந்த அரசு உடனடியாக கைவிட வேண்டும். இந்த மூன்று தீர்மானங்களும் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது" என்றும் குறிப்பிட்டார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 6 பிப் 2018