மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

சர்க்கரை இறக்குமதி: கட்டுப்படுத்த நடவடிக்கை!

சர்க்கரை இறக்குமதி: கட்டுப்படுத்த நடவடிக்கை!

உள்நாட்டுக் கரும்பு விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் சர்க்கரைக்கான இறக்குமதி வரியை 100 சதவிகிதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

2017 அக்டோபர் முதல் 2018 செப்டம்பர் வரையிலான நடப்பாண்டின் சர்க்கரைப் பருவத்தில், 60 லட்சம் டன் கூடுதல் அளவிலான சர்க்கரை உள்நாட்டில் உற்பத்தியாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதிக உற்பத்தி காரணமாக உள்நாட்டு மொத்த விற்பனைச் சந்தையில் சர்க்கரை விலையானது உற்பத்திச் செலவைவிட மிகவும் குறைந்துள்ளது. சில்லறை விற்பனையில் சர்க்கரை விலை கிலோ ஒன்றுக்கு ரூ.40 முதல் ரூ.42 வரையில் இருக்கிறது. இதனால் கரும்பு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்க்கரை ஆலைகளிடமிருந்து அவர்களுக்குக் கிடைக்கும் நிலுவைத் தொகை கிடைப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

எனவே குறைந்த விலைக்கு அதிக அளவிலான சர்க்கரை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதைத் தடுக்கச் சர்க்கரை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பாக மத்திய நிதியமைச்சகத்துக்குக் கோரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் சர்க்கரை இறக்குமதிக்குத் தற்போது விதிக்கப்படும் 50 சதவிகித இறக்குமதி வரியை 100 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

கடந்த சர்க்கரை பருவத்தில் 2.03 கோடி டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டில் மொத்தம் 2.61 கோடி டன் சர்க்கரை உற்பத்தியாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதிக உற்பத்தி எதிர்பார்ப்பால் சர்க்கரையின் சந்தை விலையானது உற்பத்திச் செலவைவிட மிகவும் குறைவாக கிலோவுக்கு ரூ.29.50 முதல் ரூ.30 வரையில் குறைந்தது. இதுபோன்ற சூழலில்தான் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்கான கோரிக்கை வலுத்துள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 6 பிப் 2018