சூர்யா வெளியிட்ட ஜருகண்டி டீசர்!


பலூன் திரைப்படத்தை அடுத்து ஜெய் நடிக்கும் ஜருகண்டி படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா.
ஷர்தா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து நடிகர் நிதின் சத்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஷ்வேத்’ மூலம் தயாரித்துவரும் திரைப்படம் ஜருகண்டி. ஜெய் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரெபா மோனிகா ஜான் நடித்துள்ளார். மேலும், ரோபோ ஷங்கர், டேனியல், இளவரசு, மைம் கோபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். போபோ ஷஷி இசையமைத்துவரும் இப்படத்திற்கு அரவிந்த் குமார் - ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவாளராகவும் பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.
சமீபத்தில், வெளியிடப்பட்ட இப்படத்தின் மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதன் ஷூட்டிங் முடிவடையவுள்ள நிலையில் தற்போது, படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். காமெடி, ஆக்ஷன், த்ரில்லர் எனக் கலவையான விகிதத்தில் உருவாகியிருக்கும் இந்த டீசர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.