நடிகராக மாறும் தயாரிப்பாளர்!


ஒய் நாட் ஸ்டுடியோஸ் மூலம் படங்களைத் தயாரித்துவரும் தயாரிப்பாளர் சஷிகாந்த், தற்போது நடிகராக அறிமுகமாகிறார்.
சி.எஸ்.அமுதன் இயக்கிய தமிழ்ப்படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் சஷிகாந்த். ஒய் நாட் ஸ்டுடியோஸ் மூலம் படங்களைத் தயாரித்துவரும் இவர் காவியத் தலைவன், காதலில் சொதப்புவது எப்படி?, வாயை மூடிப் பேசவும், இறுதிச்சுற்று, விக்ரம் வேதா உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளார். தற்போது மீண்டும் தமிழ்ப்படத்தின் இரண்டாம் பாகமான தமிழ்ப்படம் 2.0 படத்தைத் தயாரித்துவருகிறார். சிவா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், திஷா பாண்டே, ஐஸ்வர்யா மேனன் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். மேலும், சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.