அக்னி - 1(A) ஏவுகணை சோதனை வெற்றி!


அணு ஆயுதங்களைத் தாங்கி சென்று எதிரி இலக்குகளைத் தாக்கக்கூடிய, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி - 1(A) ஏவுகணை இன்று (பிப்ரவரி 6) வெற்றிகரமாகச் சோதித்துப் பார்க்கப்பட்டது.
ஒடிசா மாநிலம் பாலச்சூர் மாவட்டம் அப்துல் கலாம் தீவில் உள்ள கடற்கரைப் பகுதியில் காலை 8.30 மணியளவில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. அக்னி - 1(A) ஏவுகணை 15 மீட்டர் உயரமும், 12 டன் எடையும் கொண்டது. ஒரு டன் அணு ஆயுதப் பொருட்களைச் சுமந்து சென்று இலக்கைத் தாக்கும் அளவில் தயாரிக்கப்பட்டது.
ஒடிசாவில் பரிசோதிக்கப்பட்ட ஏவுகணை 700 கிமீ தொலைவில் இருந்து இலக்கைத் துல்லியமாகத் தாக்கியது என்று இந்தியப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
அக்னி - 1(A) ஏவுகணை வழக்கமான பயிற்சிக்காக மேற்கொள்ளப்பட்ட சோதனைதான் என்றும் கூறியுள்ளது.