மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

பொறியியல் தேர்வு முடிவு : 50% தோல்வி!

பொறியியல் தேர்வு முடிவு : 50% தோல்வி!

அண்ணா பல்கலையின் பொறியியல் முதல் பருவ தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், 50%மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.

அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள 500க்கும் மேற்பட்ட பொறியியல் மற்றும் பி.ஆர்க், கல்லூரிகளில், தன்னாட்சி கல்லூரிகள் தவிர மற்ற கல்லூரிகளில், அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு துறை சார்பில், தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அண்ணா பல்கலையின் வினாத்தாள்கள் கடினமாகவும், மாணவர்களின் சிந்தனை திறனை சோதிக்கும் வகையிலும் தயாரிக்கப்படுவதால், தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், எந்தப் போட்டி தேர்வையும் எளிதில் எதிர்கொள்ள முடியும்.

இந்நிலையில், 2017ஆம் ஆண்டு, பிளஸ் 2 படிப்பை முடித்து, பொறியியல் (engineering) மற்றும் கட்டட வடிவமைப்பாளர் (architect) படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு, நவம்பரில் முதல் பருவ தேர்வில் நடந்தது.

முதல் பருவ தேர்வுக்கான முடிவுகளை, அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, ஜிவி உமா நேற்று (பிப்ரவரி 5)அறிவித்தார். அண்ணா பல்கலையின் இணையதளம் மட்டுமின்றி, மாணவர்களின் செல்பேசி எண்களுக்கும் நேரடியாகவே, மதிப்பெண் பட்டியல் அனுப்பப்பட்டன. இந்தத் தேர்வு முடிவில், கணிதத்தில், 43.67% மற்றும் இயற்பியலில், 52.77 % மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர். ஆங்கிலத்தில், 80.48 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடல்சார் பொறியியல் வேதியியல் பாடத்தில் 71.59% மாணவர்களும், பொது வேதியியலில் 59.08% மாணவர்களும், 'ப்ராப்ளம் சால்விங்' பிரிவில், 61.7% மாணவர்களும், பொறியியல் கிராபிக்ஸ் 63.55% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொறியியல் வேலைவாய்ப்புகளுக்கு உதவும் தொழில்நுட்ப ஆங்கிலத்தில் 55.68% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். கணிதம் மற்றும் இயற்பியலில் 50% மாணவர்கள் தேர்ச்சி பெறாததால், அந்தப் பாடங்களில் மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்க, பொறியியல் கல்லூரிகள் முடிவு செய்துள்ளன. அண்ணா பல்கலையில், புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டு நடந்த, முதல் தேர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

செவ்வாய் 6 பிப் 2018