மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்!

இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்!

பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து அடுத்த கட்டப் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்த சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.

தமிழகத்திலுள்ள அனைத்துப் பேருந்துகளின் கட்டணங்களும் கடந்த ஜனவரி 19ஆம் தேதி திடீரென உயர்த்தப்பட்டது. இதற்கு எதிராக மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த மாதம் 26ஆம் தேதி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அங்குப் பேசிய ஸ்டாலின் பேருந்துக் கட்டணத்தை திரும்பப் பெற ஒரு நாள் கெடு விதிப்பதாகவும், திரும்பப் பெறவில்லையெனில் தொடர் போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து பேருந்துக் கட்டணத்தை ஒரு ரூபாய் வரை குறைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் 28ஆம் தேதி நடைபெற்ற அவசர அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய ஸ்டாலின், கட்டண குறைப்பு என்பது திட்டமிட்ட நாடகம். திட்டமிட்டபடி மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார். தொடர்ந்து 29ஆம் தேதி தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியல் ஈடுபட்டு ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், திருநாவுக்கரசர், முத்தரசன் உள்ளிட்டோர் கைதாகினர்.

தொடர்ந்து, "பேருந்துக் கட்டண உயர்வு விவகாரத்தில் அடுத்த கட்டப் போராட்டங்கள் குறித்து முடிவு செய்ய பிப்ரவரி 6ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படும்" என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று (பிப்ரவரி 6) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொள்ள உள்ளன. கூட்டத்தில் பேருந்துக் கட்டண உயர்வைக் குறைக்க அரசுக்கு எவ்வகையில் நெருக்கடி கொடுக்கலாம் எனவும், எவ்வகை போராட்டத்தை முன்னெடுக்கலாம் எனவும் ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி விவகாரம் குறித்தும் ஆலோசனை செய்யப்படவுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

செவ்வாய் 6 பிப் 2018