மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

பொதுக் காப்பீட்டு நிறுவனத்தின் லாபம் உயர்வு!

பொதுக் காப்பீட்டு நிறுவனத்தின் லாபம் உயர்வு!

உரிமை கோரியவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்ததால் பொதுக் காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் லாபம் வெகுவாக அதிகரித்துள்ளது.

2017ஆம் ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் காப்பீட்டுத் தொகைக்கான உரிமை கோரியவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்ததால் குறிப்பிட்ட அம்மூன்று மாதங்களில் பொதுத் துறை காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்தின் லாபம் ரூ.617 கோடியாக அதிகரித்துள்ளது என்று அந்நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் 2016ஆம் ஆண்டில் இந்நிறுவனம் ரூ.24 கோடி மட்டுமே லாபமாக ஈட்டியுள்ளது.

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.ஸ்ரீனிவாசன் இதுகுறித்து பிப்ரவரி 3ஆம் தேதி பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், "மேலாண்மை செலவுகள் குறைவு மற்றும் உரிமை கோரியவர்களின் எண்ணிக்கை குறைவு ஆகிய காரணங்களால் 2017ஆம் ஆண்டு டிசம்பர் வரையிலான மூன்று மாத கால இடைவெளியில் நிறுவனத்தின் லாபம் அதிகரித்துள்ளது. 2016ஆம் ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது உரிமை கோரியவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. 2016ஆம் ஆண்டு இக்காலகட்டத்தில் 95.61 சதவிகிதமாக இருந்த உரிமை கோரியவர்களின் விகிதாச்சாரம் 2017ஆம் ஆண்டு 82.8 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 6 பிப் 2018