மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

விஜயகாந்துக்கு நன்றி தெரிவித்த ஜீயர்!

விஜயகாந்துக்கு நன்றி தெரிவித்த ஜீயர்!

தேமுதிக தலைவர் விஜயகாந்தை ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கோயம்பேட்டிலுள்ள அவரது அலுவலகத்தில் நேரில் சென்று நேற்று இரவு (பிப்ரவரி 5) சந்தித்துள்ளார்.

தினமணி நாளிதழ் சார்பாக கடந்த மாதம் 7ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசினார். அவரது பேச்சு சர்ச்சைக்குள்ளாகவே தமிழகம் முழுவதும் பல்வேறு இந்துத்துவ அமைப்பினர் அவருக்கெதிராக போராட்டம் நடத்தினர். குறிப்பாக சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருந்தார். அறிவித்தபடியே கடந்த மாதம் ஜனவரி 17ஆம் தேதி உண்ணாவிரத போராட்டத்தை துவங்கிய ஜீயர் பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கிணங்க இரண்டாம் நாளே போராட்டத்தை முடித்துக்கொண்டார். மேலும் பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் கவிஞர் வைரமுத்து ஆண்டாள் சன்னிதிக்கே நேரில் வந்து மன்னிப்பு கேட்கவேண்டும், அப்படி கேட்காவிட்டால் மீண்டும் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருந்தார்.

கடந்த ஜனவரி 21ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் சாமி தரிசனம் செய்து விட்டு பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், வைரமுத்துவுக்கு எதிரான ஜீயரின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தேமுதிக ஆதரவளிக்கும் என்று கூறியிருந்தார். மேலும், கவிஞர் வைரமுத்துவுக்குக் கண்டனம் தெரிவித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் வைரமுத்துவுக்கு விடுத்த கெடு கடந்த 3ஆம் தேதியோடு முடிவடைந்தநிலையில், உண்ணாவிரதம் இருப்பது பற்றி ஆண்டாள் தாயாரின் குழந்தைகளான அனைத்து பக்தர்களிடமும் கேட்டு முடிவெடுக்கப்படும் என்று ஜீயர் கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று (பிப்ரவரி 5) இரவு தேமுதிக தலைவர் விஜகாந்தை கோயம்பேட்டிலுள்ள அவரது அலுவலகத்திற்கே சென்று நேரில் சந்தித்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், தனது போராட்டத்திற்கு ஆதரவளித்த காரணத்திற்காக விஜயகாந்திற்கு நன்றி தெரிவித்து, ஆசிர்வாதம் வழங்கியுள்ளார், மேலும் நீங்கள் நினைத்தது எல்லாம் விரைவில் நடக்கும் என்றும் கூறியுள்ளார்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

செவ்வாய் 6 பிப் 2018