மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

வாட்சப் வடிவேலு

வாட்சப் வடிவேலு

நல்லா படிச்சிட்டு ஐடி கம்பனில வேலை செய்யற, தலைமை பொறுப்புள்ள ஒருத்தரே, "உடனே ஷேர் செய்து மக்களிடம் பரப்புங்கள், போன ஆடியோவ பார்த்திங்களா.. ( அனுப்பவே இல்ல அது வேற விஷயம்) இதுபோன்ற கொடுமைல்லாம் நடக்காம இருக்க, உங்க கால் ல விழுந்து கேட்டுக்கொள்கிறோம் தயவு செய்து பலருக்கு ஷேர் செய்யவும் " அப்படின்னு அனுப்பறாரு.

இப்பதான் வாட்சப் உபயோகம் ஆரம்பிச்ச நபர்கள்ன்னா பரவால்ல.. மன்னிச்சு விட்டுறலாம்.. ஆனா நல்லா படிச்சவங்களே ஏன் இப்படி பன்றாங்கன்னு தெரியல.

இதுல இன்னொன்னு,

கண்ணீர் மல்க வேண்டுகிறோம்...

ஒரு கிராமமே அழியும் நிலை உருவாகி உள்ளது .

திண்டுக்கல் மாவட்டம்

வத்தலக்குண்டு அருகே உள்ள

""தருமத்துப்பட்டி""

கிராமத்தில் தான் இந்த நிலை கடந்த 1 வருடமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது

பெண்கள் குழந்தைகள் என சுமார் 800 பேர் தண்ணீர் எடுக்க தினமும் 1 km தூரம் செல்ல வேண்டி உள்ளது கடந்த ஒரு மாதமாக அதுவும் இல்லை அங்கே உள்ள அனைவரும் குளிக்கவும் , குடிக்கவும்.தண்ணீரை விலை போட்டு வாங்கும் நிலை உள்ளது எங்கள் ஊரில் உள்ள அனைவரும் தினமும் கூலி வேலை செய்து பிழைப்பை நடத்துபவர்கள் விலை கொடுத்து தண்ணீர் வாங்கி எங்களால் வாழ்க்கை நடத்த முடியவில்லை. போராட்டம் செய்தாலும் அதை ஒரு மணி நேரம் கூட நடத்த விடுவதில்லை எங்கள் ஊரில் உள்ள பகுதி மக்கள் ஏற்கனவே பிழைப்பு நடத்த வெளியூர் சென்று விட்டனர் மீதம் உள்ள மக்களை காப்பாற்ற உங்களை நாடி உள்ளோம் ..plz நீங்கள் செய்ய வேண்டியது ஒரு ஷேர் மட்டுமே எல்லாருக்குமே தெரியும் இந்திய சட்டத்திட்டத்தின் படி whatsapp ல் 1,50,00,00 பேரால் ஒரு பதிவு ஷேர் செய்யப் பட்டால் போதும் மத்திய உளவு துறையில் ஒரு கவனத்தை திசை திருப்பும் அதுமட்டும் இல்லாமல் இந்திய அளவில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க ஒரு குழு அமைக்கப்படும் அவ்வாறு அமைக்கப்பட்டால் அது தமிழ்நாட்டுக்கு நன்மையே இவை அனைத்தும் நீங்கள் செய்யும்

3 share

மட்டுமே plz

3×3=9

9×3=27

27×3=81

81×3=213

213×3=639

639×3=1920

1920×3=6340

6340×3=24060

24060×3=73040

73040×3=2,23,458

2,23,458×3=808965

8,08,965×3=24,04,525

24,04,527×3=72,45,459

72,45,459×3=2,14,45,828

தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடி

கண்டிப்பாக அதை செய்ய முடியும் தலை எழுத்தை மாற்ற

கடைசியில் தமிழகத்துக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்

எதை எதையோ share செய்யும் நாம்

தமிழகத்தின் நன்மைக்காக ஒரு ஷேர் plz

நீ ஒரு தமிழன் என்றால் share செய்யவும்...

விட்டா, ஐநா சபையின் நேரடி பார்வைக்கு கொண்டு செல்லப்படும்ன்னு சொல்லாம விட்டாங்களே..

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

செவ்வாய் 6 பிப் 2018