விஜய் படத்தில் இணைந்த இரட்டையர்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் ராம், லட்சுமணன் என்ற இரட்டையர்கள் சண்டைப் பயிற்சியாளர்களாக ஒப்பந்தமாகியுள்ளனர்.
துப்பாக்கி, கத்தி ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்துள்ள புதிய படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. பைரவா படத்தைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் இரண்டாவது முறையாக விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். மலையாள ஒளிப்பதிவாளர் க்ரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, சந்தானம் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். தேசிய விருது பெற்ற ஸ்ரீகர் பிரசாத், படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.