ஆர்கே நகர் மதுக்கடைகளை மூட வேண்டும்!


ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று மூடவிருக்கும் 500 மதுக்கடைகளில் ஆர்கே நகரில் இருக்கும், 2 மதுக்கடைகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசுக்கு நடிகர் விஷால் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று (5 பிப்ரவரி) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"2016ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலின்போது ஜெயலலிதா அவர்கள், படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று உறுதியளித்து, அதனைத் தொடங்கியும் வைத்தார். அவரது மறைவிற்குப் பிறகு, இந்த வருடம் அவருடைய பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதியன்று , 500 மதுக்கடைகளை மூட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது வரவேற்கப்பட வேண்டிய செயல்.
சென்னை ஆர்கே நகர் தொகுதிக்குட்பட்ட புது வண்ணாரப்பேட்டை நெடுஞ்சாலை மற்றும் கிராஸ் ரோடு ஜங்ஷன் பகுதியில் உள்ள 2 மதுக்கடைகள் அங்கிருக்கும் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருக்கின்றன. இந்த மதுக்கடைகலை மூடச் சொல்லி அடிக்கடி போராட்டங்கள் நடைபெற்றாலும் இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.