மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

மின்னணு வேளாண் சந்தைக்கு ஊக்குவிப்பு!

மின்னணு வேளாண் சந்தைக்கு ஊக்குவிப்பு!

விவசாயப் பொருட்களின் விற்பனை சந்தைக் குழுக்களை மின் சந்தை (ENAM) தளத்துடன் சேர்த்து விவசாயப் பொருட்கள் ஆன்லைனில் விற்கப்படும் எனக் கடந்த வாரம் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மொத்தம் 585 விவசாய பொருட்களின் சந்தைக் குழுக்கள் உள்ளது. இதனை மின் சந்தை தளத்துடன் சேர்ப்பதன் மூலம் விவசாய பொருட்களை இனி ஆன்லைனில் வாங்கவோ, விற்கவோ முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆன்லைன் வர்த்தகம் மூலம் இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டு விவசாயிகள் தங்கள் உற்பத்திக்கு உரிய நல்ல லாபம் பெறுவார்கள் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. இது குறித்து பட்ஜெட் தாக்கலின் போது அருண் ஜேட்லி பேசுகையில், ”ஏற்கனவே 470 விவசாய பொருட்களின் சந்தைக் குழுக்கள் மின் சந்தை தளத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மாதங்களில் எஞ்சியுள்ள 115 சந்தைகளும் சேர்க்கப்படும். டிசம்பர் 2011ஆம் ஆண்டில் கலாபுராகியில் அறிமுகமான ஆன்லைன் விவசாய சந்தை குழுக்களின் ஆரம்ப நிலை இன்று பலருடைய நினைவில் இல்லை” என்று தெரிவித்தார்.

இந்தியாவில் முதன்முதலாக 2011ஆம் ஆண்டில் கர்நாடக மாநிலம் கலாபுராகியில் ராமசேஷன் என்பவர் விவசாயிகளுக்கான முதல் வேளாண் சந்தையை வடிவமைத்தார். இவர் தி எகனாமிக் டைம்ஸ் என்னும் ஊடகத்திடம் இதுகுறித்து பேசுகையில், “ஆன்லைன் விவசாய வர்த்தகத்தின் மூலம் விவசாயிகளின் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். இதன் மூலம் அவர்களின் அழுத்தம் குறையும். ஆனால் இத்திட்டத்தின் கட்டுப்பாடுகளை வேளாண்சந்தை எப்படி எடுத்துக்கொள்ளும் என்று தெரியவில்லை. இத்திட்டம் இன்னும் பெரிதாக வளரவில்லை என்றாலும் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்தின் ஊக்குவிப்பு நம்பிக்கை தருவதாக உள்ளது. மொத்தம் 7000 சந்தைகள் இந்தியாவில் உள்ளன். இதில் 5000 சந்தைகள் சிறிய மற்றும் நடுத்தர சந்தைகளாகும். மீதம் பெரிய மற்றும் சிறிய சந்தைகளாகும். சந்தைகளைப் போட்டி தன்மையும் செயல்திறனுடனும் செயல்படுத்த வேண்டியதே இச்சந்தையின் நோக்கமாகும். இதன் மூலம் விவசாயிகள் லாபமடைவார்கள்" எனத் தெரிவித்தார். தற்போது இவர் என்.சி.டி.இ.எக்ஸ். திட்டத்தின் ஆலோசகராக உள்ளார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

செவ்வாய் 6 பிப் 2018