மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

ஹெல்த் ஹேமா: ஒருநாள் போதுமா புற்று நோய் பற்றி அறிந்துகொள்ள..!

ஹெல்த் ஹேமா:  ஒருநாள் போதுமா புற்று நோய் பற்றி அறிந்துகொள்ள..!

நேற்று ஒருநாள் மட்டும் புற்று நோய் பற்றி பேசிவிட்டு அடுத்த நாளே மறந்து போய் கடந்துவிடுகிறோம் நம்மில் பலர். இன்றும் சில புற்று நோய் அறிகுறிகளை காணலாம். நினைவில் கொண்டு விழிப்புணர்வு அடையலாம். புற்று நோய் இல்லாத சூழலை உருவாக்கலாம்.

புற்று நோய்க்கான பொதுவான அறிகுறிகள் என்ன?:

பசியின்மை, எடை குறைதல், சோர்வு, ரத்த சோகை போன்றவை பொதுவான அறிகுறிகள். இதுதவிர, எந்த இடத்தில் புற்றுநோய் வருகிறதோ அந்த இடத்துக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட அறிகுறிகள் தென்படுவதுண்டு.

உணவுக்குழாய் புற்றுநோய்:

நீர் மற்றும் உணவு விழுங்குவதில் சிரமம்;

தீராத முதுகு வலி;

பசியின்மை;

ரத்த சோகை.

இரைப்பைப் புற்று:

வயிற்றுப் பொருமல்;

வயிற்றின் மேல் பாகத்தில் வலி;

ரத்த வாந்தி;

சாப்பிட்ட பல மணி நேரம் கழித்து ஜீரணம் ஆகாமல் வாந்தி எடுத்தல்.

சிறுகுடல் புற்றுநோய்:

வயிற்று வலி;

வயிற்றில் வீக்கம்;

தீராத வாந்தி;

வயிற்றுப் பொருமல்.

பெருங்குடல் புற்றுநோய்:

ரத்த சோகை;

மலத்தில் ரத்தம்;

வயிற்று வலி;

வயிறு வீக்கம்.

கல்லீரல் புற்று:

வயிற்றின் மேல் பாகத்தில் வலி;

மஞ்சள் காமாலை;

கல்லீரல் வீக்கம்;

வயிறு வீக்கம்.

கணையப் புற்று:

தீராத வயிற்று வலி;

வயிற்றில் பொருமல்;

முதுகு வலி,

திடீரெனச் சர்க்கரை வியாதி வருதல்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

செவ்வாய் 6 பிப் 2018