மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

நெதர்லாந்து திரைப்பட விழாவில் பேரன்பு!

நெதர்லாந்து திரைப்பட விழாவில் பேரன்பு!

கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி போன்ற உணர்வுபூர்வமான திரைப்படங்களைக் கொடுத்துத் தமிழ்த் திரையுலகின் சிறந்த இயக்குனர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள இயக்குனர் ராம் சென்ற வருடம் வெளியான தரமணி திரைப்படத்தையடுத்து ‘பேரன்பு’ எனும் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் சென்ற மாதம் 27ஆம் தேதி நெதர்லாந்தில் நடைபெற்ற ரோட்டர்டம் சர்வதேசத் திரைப்பட விழாவில் பார்வையாளர்கள் விருதுக்கான போட்டியில் கலந்துகொண்டது. அந்தப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 187 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இப்போட்டியில் ராமின் ‘பேரன்பு’ திரைப்படத்திற்கு 20ஆவது இடம் கிடைத்துள்ளது. மேலும் சிறந்த ஆசியத் திரைப்படத்தின் விருதுக்கான போட்டியில் கலந்துகொள்ள ‘பேரன்பு’ தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒரு இயக்குனருக்கு இரண்டு படங்கள் இடம்பெறலாம் என்பதால் ராமின் ‘தரமணி’ திரைப்படமும் இவ்விழாவில் திரையிடப்பட்டுள்ளது.

திரைப்படம் தேர்வு செய்யப்பட்டதையடுத்து ராம் தனது முகநூல் பக்கத்தில் “47ஆவது ரோட்டர்டம் (நெதர்லாந்து) சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு திரைப்படம் தேர்வாகியுள்ளது. உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி...பேரன்போடு ராம்” என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

செவ்வாய் 6 பிப் 2018